districts

img

பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்ப்பில் விதைநெல் வாங்கிச் செல்லும் விவசாயிகள்

கோபி, ஜூலை 06- கொடிவேரி பாசனத்திற்கு தண் ணீர் திறக்கப்படும் என எதிர்பார்த்து விதைநெல்லை விவசாயிகள் வாங் கிச்செல்கின்றனர்.  ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை மூலம் கொடிவேரி பாசனத் திற்கு அணையின் நீர் இருப்பை பொருத்து தடப்பள்ளி - அரக்கன் கோட்டை வாய்க்காலில் தண்ணீர் திறப்பதால் 24ஆயிரம் ஏக்கர் விவ சாய நிலங்களில் பாசன வசதி பெற்று  வருகிறது இதில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள் சாகுபடியில் பெரும் பாலான விவசாயிகள் நெல் சாகு படியை அதிகளவில் செய்து வருகின் றனர். இந்நிலையில், கடந்த சில நாட்க ளாக பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழை யால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு 68 அடியை தாண்டியுள்ளது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து கணிசமாக இருக்கும் என்பதால் அணையின் நீர் இருப்பை பொருத்து  இந்தாண்டு முதல்போக சாகுபடிக்கு  தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்காலில் தண்ணீர் திறக்க  வேண்டி பாசன சங்க விவசாயிகள்  அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள னர்  இதனால் தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் சூழல் நிலவி வருவதால் கோபி வேளாண் விரிவாக்க மையங் களில் சன்னரகம், மோட்டோரகங்க ளில் டிபிஎஸ்5, ஏடீடி54, கோ51, கோ52, ஏஎஸ்டி16 உள்ளிட்ட ரகங்க ளில் விதைநெல் சுமார் 60டன் கொண்டு வந்து இருப்பு வைக்கப்பட் டுள்ளது. இதனையறிந்த, தடப்பள்ளி பாசன விவசாயிகள் வழக்கமாக தடப் பள்ளி பாசனத்திற்கு தண்ணீர் திறக் கப்பட்ட பின்னரே விதைநெல் வாங்கு வது வழக்கம். ஆனால், இந்தாண்டு  தடப்பள்ளி பாசன விவசாயிகள் தண் ணீர் திறக்கும் முன்னரே கோபி  வேளாண் விரிவாக்க மையத்தில்  விதைநெல் வாங்கத் தொடங்கியுள்ள னர். இதில், குறுகிய கால நெற்பயிர் ரகங்களில் நோய்தாக்குதல் குறைந்த்தாகவும் வடகிழக்கு பருவ மழைக்கு தாக்குபிடித்தும் அதிக மக சூல் கிடைக்கும் நெற்பயிர் விதை நெல்லை வாங்கி செல்கின்றனர்   இதுகுறித்து விவசாயிகள் தெரி விக்கையில்... பவானிசாகர் அணையின் நீர்மட் டம் உயர்ந்து வருவதால் தடப்பள்ளி -  அரக்கன்கோட்டை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் சூழல் நிலவி  வருவதால் தண்ணீர் திறப்பிற்கு முன் னரே வேளாண் விரிவாக்க மையங்க ளில் விதைநெல் வாங்கி செல்வதாக வும் தடப்பள்ளி பாசனத்திற்கு தண் ணீர் திறக்கப்படும் என்ற நம்பிக்கை யில் எதிர்பார்த்து உள்ளதாக தெரி வித்தனர்.