districts

img

குடியுரிமை சட்டத்தை ஆதரித்ததால் தோல்வி அதிமுக அன்வர் ராஜா ஒப்புதல்

சென்னை,ஜன.3- ஊரக உள்ளாட்சி தேர்தலில் இராமநாத புரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்தில் 2-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவின் மகள் ராவியத்துல் அதவியா போட்டி யிட்டு, தோல்வியடைந்தார்.  மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அன்வர் ராஜாவின் மகனும் தோல்வியடைந்தார்.  இது தொடர்பாக அன்வர் ராஜா தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், அதிமுக அரசுக்கு எதிராக சிறுபான்மையினர் வாக்களித்துள்ளனர். குடியுரிமை சட்டத்தை ஆதரித்ததால், உள்ளாட்சி தேர்தலில் தோல்வி ஏற்பட்டுள்ளது. தேசிய குடியுரிமை பதிவேடு நாடு முழுவதும் அமலாகும் என்ற அச்சம் சிறுபான்மையினர் மத்தியில் நிலவுகிறது. சிறுபான்மையினர் அச்சப்படுவதால், அதிமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்யும் என நம்புகிறேன். தேசிய குடியுரிமை பதிவேட்டை அமல்ப டுத்த மாட்டோம் என அரசு சொல்லும் என விரும்புகிறேன். அசாமில் மட்டுமே அமல் என பாஜக கூறியதால், நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு அதிமுக ஆதரவளித்தது என்று தெரிவித்தார்.

;