கோவை, ஏப். 2- தேர்தல் சமயத்தில் மக்களை திசை திருப்பி வாக்கு வாங்குவதற்காகவும், அரசியல் செய்வதற்காகவும் மட்டுமே கச் சத்தீவு விவகாரத்தை பாஜக கையிலெடுத் துள்ளதாக, முன்னாள் அமைச்சர் பொங் கலூர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழ னிசாமி, இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகி கள் மற்றும் தொண்டர்களுடன் வீதி வீதி யாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களி டம் பேசிய, பொங்கலூர் பழனிசாமி, கடந்த 3 ஆண்டுகளில் திமுக அரசு மகளிர் மற்றும் பல்வேறு தரப்பு மக்களுக்கு ஏராள மான சலுகைகளை வழங்கியுள்ளது. மக ளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவச பய ணத்திட்டம் திமுகவுக்கு பெரும் ஆதரவை தந்துள்ளது. அதேபோல், மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம், கல்லூரி யில் படிக்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் உள்ளிட்ட திமுக அரசின் பல்வேறு திட்டங்கள் பொதுமக்களி டையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்தத் திட்டங்களை பொதுமக்களிடம் சொல்லி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்கு மாருக்கு வாக்கு சேகரித்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மோடி எதையும் செய்யவில்லை, கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பல்வேறு போராட்டங்களை திமுக நடத்தியுள்ளது. அந்த போராட்டங்களில் பங்கெடுத்து நானும் சிறைக்கு சென்றுள்ளேன். இப்போது அர சியல் காரணங்களுக்காக கச்சத்தீவு உள் ளிட்ட சில விவகாரங்களை பாஜக கையில் எடுத்துள்ளது என்றார்.