ஈரோடு, ஜூலை 26- கணக்கம்பாளையம் பெருமாள் கோவில் நிலங்களுக் கான குத்தகையை பாக்கி இல்லாமல் செலுத்தி வரும் விவ சாயிகளை வெளியேற்றி விட்டு, ஏலம் விடுவதை கைவிடக் கோரி தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்து வோர் பாதுகாப்பு சங்கத்தினர் சத்தியமங்கலத்தில் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், கணக்கம்பாளையத் தில் கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவி லுக்கு சொந்தமான 158 ஏக்கர் நிலத்தில் சுமார் 60 விவசாயி கள், 70 ஆண்டுகளாக சாகுபடி செய்து வருகின்றனர். குத்தகையை பாக்கி இல்லாமல் செலுத்தி வருகின்றனர். தமிழ் நாடு குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சட்டம் 1955 பிரிவு 3-ன் படி முறையாக குத்தகை விவசாயிகளாக பதிவு செய்ய வேண்டும். குத்தகைதாரர்களை சட்டப்படி பாதுகாக்காமல் அவர்களை வெளியேற்றி விட்டு ஏலம் விடுவது குத்தகை தாரர்களின் உரிமைகளைப் பறிப்பதாகும். எனவே, அவர்களி டம் விண்ணப்பம் பெற்று குத்தகைதாரர்களாக பதிவு செய்ய வேண்டும். விவசாயிகளை வெளியேற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வி.தட்சிணாமூர்த்தி தலைமையில் சத்தியமங்கலம் கொண்டையம்பாளையத் தில் தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்து வோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நில உரிமையை பாதுகாக்க நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில் கோரிக்கைகளை விளக்கி மாவட்ட அமைப்பாளர் எஸ்.முத்துசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செய லாளர் ஏ.எம்.முனுசாமி, வழக்குரைஞர் தேவராஜ், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.சிவக்குமார் ஆகியோர் உரையாற்றி னர். இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.