கோவை, பிப்.10- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ள நிலை யில், கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கு போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு பிப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள் ளது. உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியில் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக, விசிக, கொம தேக மற்றும் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தல் களத்தில் நிற்கிறது. இதன்ஒருபகுதி யாக கோவை மாநகராட்சி மற்றும் 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி களின் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கான வாக்கு சேகரிப்பில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மார்க்சிஸ்ட் கட்சி யின் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன், திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா ஆர்.கிருஷ்ணன், சி.ஆர்.இராமச்சந்திரன், மருதமலை சேனா திபதி, டாக்டர்.வரதராஜன், ஜெய ராமகிருஷ்ணன், காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக் குமார், விஎம்சி மனோகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வி.எஸ்.சுந்த ரம், ஆறுமுகம், மதிமுக ஆர்.ஆர்.மோகன்குமார், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்பநாபன் மற்றும் விடு தலை சிறுத்தைகள், கொமதேக உள் ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தீவிர பரப்புரை யில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாந கராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் 5 வார்டுகளில் போட்டி யிடுகின்றனர். இதில், 12 ஆவது வார் டில் வி.இராமமூர்த்தி, 24 ஆவது வார் டில் ஆர்.பூபதி, 47ஆவது வார்டில் இரா.செல்வம், 28 ஆவது வார்டில் கண்ணகி ஜோதிபாசு, 13 ஆவது வார் டில் என்.சுமதி ஆகியோர் போட்டியிடு கின்றனர். இவர்கள் தங்களது வார் டுக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்ற னர்.
100 வார்டுகளில் வெற்றி பெறுவோம்
முன்னதாக, கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிர பிரச்சாரம் மேற்கொண் டார். அப்போது அவர் பேசுகையில், பெண்களுக்கு இலவச பேருந்து பய ணம், நகை கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி என எண்ணற்ற சலு கைகளை நமது முதல்வர் அறிவித்துள் ளார். மேலும், கோவையில் உள்ள மோசமான சாலைகளை புதுப்பிக்க ரூ.200 கோடியும், தெருவிளக்குகள் பராமரிக்க ரூ.20 கோடி ரூபாயும் முதற் கட்டமாக ஒதுக்கிய நம் முதல்வர், இன்னும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்த உள்ளார். எனவே, திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங் கள். மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரங்களுக்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் உற்சாக வர வேற்பு கொடுத்து எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். மதசார்பற்ற முற் போக்கு கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் கோவை மாநகராட்சியின் 100 வார்டு களையும் வென்று திட்டங்களை செயல்படுத்துவார்கள், என்றார்.