districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

நிலத்தடி நீரை பாதுகாக்க வலியுறுத்தல்

நிலத்தடி நீரை பாதுகாக்க வலியுறுத்தல் கோவை, ஆக.11- தடுப்பணைகள் கட்டி நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும்  என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மதுக்கரை ஒன்றிய பேரவைக் கூட்டம், கோவை மாவட்டம், ஒத்தக்கால் மண்ட பம் எம்.நஞ்சப்பன் நினைவகத்தில், சங்கத்தின் தலைவர் மணி யன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் வி. ஆர்.பழனிசாமி துவக்க உரையாற்றினார். மாவட்டத் தலை வர் வி.பி.இளங்கோவன், ஒன்றியச் செயலாளர் எஸ்.சி.சண்மு கம், கெளரவத் தலைவர்கள் கே.அய்யாசாமி, எஸ்.கருப் பையா ஆகியோர் பேசினர். இக்கூட்டத்தில் மதுக்கரை ஒன்றி யப் பகுதியில் உள்ள ஓடைகளில் மழைக்காலங்களில் தண் ணீர் மேற்கு நோக்கி சென்று கடலில் கலக்கிறது. அதை,  தக்க இடங்களில் தடுப்பணைகள் மழைநீரை பாது காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நொய்யல் ஆற்றில்  கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். மதுக்கரை ஒன்றியம்,  நாச்சிபாளையத்தில் மிகப்பெரிய தக்காளி சந்தை உள்ளது.  அங்கு தக்காளி விவசாயிகள் பயனடையும் வகையில் ஜாம்  தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், மாநில  துணைத்தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன். நிறைவுரையாற்றி னார். இதனிடையே, வயநாடு பேரிடர் நிதியாக ரூ.20 ஆயிரத்து  400 வழங்கப்பட்டது.

மாணவரை எட்டி உதைத்த  உடற்கல்வி ஆசிரியர் இடைநீக்கம்

சேலம், ஆக.11- பள்ளி மாணவரை எட்டி உதைத்த உடற்கல்வி ஆசிரியரை  பணியிடைநீக்கம் செய்து சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டுள்ளார். சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், கௌளத்தூர் நிர்மலா  மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை என்பவர், மாணவர்களை ஷூ காலால் எட்டி உதைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்ப வம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும்.  மேலும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என இந்திய மாணவர் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளர்  எஸ்.பவித்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத் தப்பட்டிருந்தது. மேலும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என பல்வேறு அமைப்பினர் வலியுறுத்திய நிலை யில், உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலையை பணியிடை  நீக்கம் செய்து சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி உத் தரவிட்டுள்ளார்.

800 அடி உயரத்திலிருந்து  உருண்டு விழுந்த பாறைகள்!

நாமக்கல், ஆக.11- ராசிபுரம் அருகே 800 அடி உயரத்தில் இருந்து திடீரென  உருண்டு விழுந்த பாறைகளால் அடிவாரப்பகுதி பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள போதமலை  கிராமத்தில் கீழுர், மேலூர், மற்றும் கிடமலை ஆகிய மூன்று  மலை கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் ஏராளமான  பொதுமக்கள் வசித்து வருகின்றனர். உரிய பாதை வசதி  இந்த மலைக்கிராமங்களுக்கு, சில மாதங்களுக்கு முன்பு,  தமிழக அரசின் சார்பில் பாதை அமைப்பதற்கு நிதி ஒதுக்கப் பட்டு, தற்போது சாலை அமைப்பு பணிகள் நடைபெற்று வருகி றது. இந்நிலையில், சனியன்று இரவு ராசிபுரம் அருகே உள்ள  புதுப்பட்டி கெடமலை அடிவாரத்தில் திடீரென சத்தம் கேட்டுள் ளது. இதனை அடுத்து பொதுமக்கள் வீடுகளில் இருந்து  வெளியே வந்து பார்த்தபொழுது, கிடமலை பகுதியில் சுமார்  800 அடி உயரத்திலிருந்து பெரிய அளவிலான பாறைக்கற் கள் உருண்டோடியபடியே அடிவாரத்தில் இருக்கும் குடியி ருப்பு பகுதியில் விழுந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ராசிபுரம் வட்டாட்சியர் சரவணன் உத்தர வின் பேரில், வருவாய் துறையினர் அப்பகுதி பொதுமக்களி டம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து பெய்து வரும்  மழையின் காரணமாக பாறைகளுக்குள் இடையே இருந்த  மண் சரிந்து அதன் காரணமாக பாறைகள் கீழே விழுந்திருக்க லாம். நிலச்சரிவு ஆபத்து ஏதும் இல்லை என அதிகாரி கள் தெரிவித்தனர்.

பாட்டையா சிறுகதைத் தொகுப்பு அறிமுகம்

பொள்ளாச்சி, ஆக.11- எழுத்தாளர் பொள்ளாச்சி அபி எழுதிய பாட்டையா சிறுகதைத் தொகுப்பு அறிமுக விழா நடைபெற்றது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி காந்தி  சிலை அருகில் உள்ள புக்ஸ் & புக்ஸ் அரங் கில், எழுத்தாளர் பொள்ளாச்சி அபி எழுதிய  பாட்டையா சிறுகதைத் தொகுப்பு அறிமுக  விழா சனியன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சி யில் பழ.அசோக் வரவேற்றார். நூலினை அறி முகம் செய்து கவிஞர் சிற்பி சிறப்புரையாற் றினார். ஆவணப்பட இயக்குநர் பேராசிரியர் சாரோன் வாழ்த்தி பேசினார். எழுத்தாளர் அபி  ஏற்புரையாற்றினார். புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் கலை இலக்கிய மன்றம் நிகழ்வை ஒருங்கிணைத்தது. இதில் எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் கலை இலக்கிய ஆர் வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுபோதையில் வந்தவரிடம் கைவரிசை: போலீசார் இருவர் பணியிடை நீக்கம்

அவிநாசி, ஆக.11- கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குடிபோதை யில் வாகனம் ஓட்டி வந்த நபரிடம் ஆப்பிள் இயர்பட்ஸை பிடிங் கிய இரு போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி காவல் நிலையத் தில் பணியாற்றி வரும் மருது பாண்டியன் என்ற சிறப்பு உதவி  ஆய்வாளர் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கோவை நோக்கி சென்ற காரை  சோதனை செய்தார். அதில், காரை  ஓட்டி வந்த நபர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரிடம் ரூ.7 ஆயிரம் ரூபாய் லஞ்சம்  பெற்றுக் கொண்டதுடன், அவர் வைத்திருந்த பீர் பாட்டில்  மற்றும் 37 ஆயிரம் ரூபாய் ஆப்பிள் இயர்பட்ஸ் உள்ளிட்ட வற்றை பறித்துக் கொண்டு அனுப்பி உள்ளனர். இது குறித்த  அந்த நபர் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவல கத்தில் அளித்த புகாரின் பேரில் சிறப்பு ஆய்வாளர் மருது  பாண்டியன் மற்றும் ஆயுதப்படை மோட்டார் வாகனப் பிரிவு  காவலர் குரு ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள் ளனர்.

பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் மண் எடுப்பதில் பிரச்சனை

உடுமலை, ஆக.11- பெருநிறுவனங்கள் கனரக வாக னங்கள் மூலம்  மண் எடுக்கும்போது ஏற்படாத பிரச்சனை, விவசாயிகள்  இலவசமாக மண் எடுக்கும் போது மட் டும் ஏற்படுவதற்கு வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிக ளின் மெத்தன போக்கே காரணம் என  விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ள னர். விவசாய பயன்பாட்டுக்கும், மண் பாண்டம் செய்வது உள்ளிட்ட தேவை களுக்காக குளம் மற்றும் குட்டைக ளில் இருந்து  இலவசமாக வண்டல்  மண் எடுத்து கொள்ளலாம் என  தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளி யிட்டது. அதன்படி விவசாயிகள் தங் கள் விளை நிலங்களுக்கு அருகில் இருக்கும் குளங்களில் மண் எடுக்க ஆன்லைன் மூலம் வட்டாட்சியருக்கு விண்ணப்பம் அனுப்பினால், அனு மதி வழங்கப்படும் என்று தெரி விக்கப்பட்டது. இந்நிலையில், திட் டம் தொடங்கியது முதல் தற்பொழுது  வரை பல்வேறு குளறுபடி ஏற்பட் டுள்ளது.  திருமூர்த்தி அணையில் விவசா யிகள் மண் எடுக்கும் போது, பொதுப் பணித்துறை மற்றும் வனத்துறை அதி காரிகள் பிரச்சனை செய்ததால் மண்  எடுப்பது சில நாட்கள் தடைப்பட் டது. பின்னர் பருவ மழை பெய்ததால்  அணையின் நீர்மட்டம் உயர்ந்து, மண்  எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. மேலும், சில விவசாயிகளால் வண் டல் மண் எடுக்க அனுமதி கோரி ஆன் லைனில் பதிவு செய்ய முடிவில்லை எனவும், ஆனால் சில விவசாயிகள் மட்டும் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. வருவாய்த்துறை அதிகாரி கள் விளைநிலங்களுக்கு அருகில் இருக்கும் குளங்களில் மண் எடுக்க  அனுமதி தராமல், பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள குளத்தில் மண்  எடுக்க அனுமதி தருவதால் போக்கு வரத்து செலவுகள் அதிகமாகும் என  விவசாயிகள் தெரிவித்தும், அதிகாரி கள் கண்டு கொள்ளாமல் இருப்பதா கவும் புகார் எழுந்தது. இப்படி மண்  எடுப்பதில் பல குளறுபடிகள் ஏற்பட் டுள்ளது.   இந்நிலையில், கடந்த வாரம்  உடுமலை மற்றும் குடிமங்கலம் பகுதி யில் மண் எடுப்பதில் விவசாயிக ளுக்கு இடையே பிரச்சினை ஏற்பட் டது. வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித் துறையின் மெத்தன போக்கே இதற்கு காரணம் என விவ சாயிகள் தெரிவிக்கின்றனர். உடுமலை, மடத்துக்குளம் ஆகிய  பகுதிகளில் கடந்த மாதம் பெருநிறுவ னங்கள் கனரக வாகனங்கள் மூலம் கிராவல் மண் எடுக்கும் போது சாலை  மற்றும் விளை நிலங்களில் இருத்த  பயிர்கள் சேதமடைந்தது. இருப்பி னும் எந்த பிரச்சனையும் ஏற்படாத வாறு காவல்துறை, வட்டார போக்கு வரத்து அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் பார்த்து கொண்ட னர். ஆனால், இன்று விவசாயிக ளுக்கு இலவசமாக மண் எடுக்கும்  போது மட்டும் ஏன் பிரச்சனை ஏற்படுகி றது என் ?  என சமூக ஆர்வலர்கள்  கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த மாதம்  இது குறித்து தீக்கதிர் நாளிதழ்  செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பி டத்தக்கது.

வயநாடு பேரிடர்: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 100 வீடுகள்!

சென்னை, ஆக.11- வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு வணிகர் பேரமைப் பின் சார்பில் 100 வீடுகள் கட்டித்தருவதாக கேரள முதல்வரை சந்தித்து தெரிவித்தனர். இதுகுறித்து பேரமைப்பின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பு வணிகர்களுக்காக மட்டுமன்றி, பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மாண வச் செல்வங்கள் அனைவருக்கும் பல்வேறு வகைகளில் அவ்வப்போது நலத்திட்டங்கள் மூலம் உதவிக்கரம் நீட்டி வருகிறது. இயற்கை சீற்றம், தீ விபத்துக்கள், பேரிடர் காலங்க ளில் பாதிக்கப்படும் வணிகர்களுக்கும், நுகர் வோர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் உதவிக் கரம் நீட்டி உறுதுணையாய் இருந்ததை கட லூர், சென்னை, மற்றும் தென் மாவட்டங்க ளில் ஏற்பட்ட புயல், கனமழை பேரிடர் சம யங்களில் வணிகர்களுக்காக மட்டுமன்றி, பொதுமக்களுக்கும், பல்வேறு வகைகளில் உணவுப் பொருட்களாகவும், நிதி உதவியாக வும் வழங்கி வந்திருக்கிறது. அந்த வரிசையில் தற்போது கேரள மாநி லம், வயநாட்டில் ஏற்பட்ட கொடூர மற்றும் கோரச் சம்பவமான பெருமழை நிலச்சரிவால் ஒருசில ஊர்களே காணாமல் போயுள்ளன.  அதில் மிகப்பெரிய சோகம் 500க்கும் மேற் பட்டோர் உயிரிழந்திருப்பதுடன் ஆயிரக் கணக்கானோர் வீடு உடமைகளை இழந்து நிராதரவாக நிற்கின்ற நிலை மிகவும் வருத்தத்திற்குரியது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பின் நீலகிரி மாவட்ட நிர்வாகிகளின் தூண்டுதலாலும், உந்துதலாலும் வயநாடு பேரிடரில் வீடு இழந்த 100 பேருக்கு வீடு கள் கட்டித்தர பேரமைப்பு ஆயத்தமாய் இருக் கிறது என்பதை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அவர்களிடம் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் மாநில பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு, பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா, தலைமைச் செயலாளர் பேராசிரியர் ஆர்.ராஜ்குமார், கோவை மண்டலத்தலைவர் டி.ஆர்.சந்திர சேகரன், கன்னியாகுமரி மண்டலத் தலைவர் டி.பி.வைகுண்டராஜா, நீலகிரி மாவட்டத் தலைவர் கே.முகம்மது பாரூக், மாநில துணைத்தலைவர் ஏ.ஜெ.தோமஸ், கன்னியா குமரி மாவட்டத் தலைவர்கள் ஏ.அல்அமீன், கே.பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் வெள்ளி யன்று நேரில் சந்தித்தனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பின் சார்பில் 100 வீடுகள் கட்டித்தரும்  இந்த முயற்சிக்கு கேரள மாநில அரசு  அனைத்து ஆதரவையும், ஒத்துழைப்பையும் அளித்து உதவுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.