districts

img

நகராட்சி நகர விற்பனைக் குழு உறுப்பினர் தேர்தல் சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கம் அபார வெற்றி

மே.பாளையம், ஆக. 17- மேட்டுப்பாளையம் நகராட்சி நகர விற்பனைக் குழு உறுப்பினர் தேர்தலில் சிஐடியு பொதுத் தொழி லாளர் சங்கத்தினர் அபார வெற்றி  பெற்று உள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட  பகுதிகளில் சாலையோரக்கடை களை முறைப்படுத்தவும் அதற்காக நகர விற்பனைக் குழுவை உருவாக் கவும் முடிவு செய்யப்பட்டது. அதன் படி 848 சாலையோர வியாபாரிக ளுக்கு அடையாள அட்டை வழங் கப்பட்டது. மேலும், நகர விற்பனைக் குழு உறுப்பினர்களாக ஆறு பேரை  தேர்வு செய்ய மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது.  இத்தேர்தலில் போட்டிடும் வேட் பாளர்களிடம் வேட்பு மனுக்களை பெறுவதற்கு ஜுலை 26 ஆம் தேதி யன்று முதல் ஆக.2 ஆம் தேதியன்று  வரை பெறப்படும் என மேட்டுப் பாளையம் நகராட்சி நிர்வாகம் அறி வித்தது. வேட்பு மனு தாக்கல்  செய்யும் இறுதி நாளன்று மேட்டுப் பாளையம் தாலுகா சிஐடியு சாலை யோர வியாபாரிகள் சங்கத்தின்  சார்பில் அப்துல் சமது. ஆனந்தாயி,  கனகமணி, ரங்கநாதன், யாசர் அராபத், சலீம் ஆகிய ஆறு பேர்  ரூ. 2000 வைப்புத் தொகை செலுத்தி  நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி  அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையில், சிஐடியு சார்பில் போட்டியிட்ட ஆறு பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  இதனையடுத்து, சனியன்று, தேர்தல் வெற்றிச் சான்றை மேட்டுப் பாளையம் நகராட்சி தேர்தல் நடத் தும் அலுவலர் அறிவு செல்வம்  வழங்கினார். வெற்றி பெற்ற வேட் பாளர்களை வியாபாரிகளுக்கான மத்திய மாநில அரசு கொண்டுவ ரும் அனைத்து சலுகைகளையும் பெற்றுத் தருவோம் என்று அனை வரும் உறுதிமொழி எடுத்தனர். பெற்றி பெற்ற அனைவரையும் பொதுமக்கள், வியாபார்கள் மற் றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்தி னர்.