திருப்பூர், அக். 27 – திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்ட மன்ற தொகுதிகளில் மொத்தம் 23 லட்சத்து 16 ஆயிரத்து 111 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 11 லட்சத்து 37 ஆயிரத்து 321, பெண்கள் 11 லட்சத்து 78 ஆயிரத்து 455 மற்றும் மாற்றுப் பாலினத்தார் 335 ஆகியோர் அடங் குவர். திருப்பூரில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2024 வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சி யர் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளியன்று இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 2024-ஆம் ஆண்டு ஜன வரி 1ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் - 2024 மேற்கொள்வதற்காக, இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப் பட்ட கால அட்டவணைப்படி, திருப்பூர் மாவட் டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதி களுக்கு உரிய வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் மறுசீரமைக்கப்பட்ட இறுதி வாக்குச் சாவடிகள் பட்டியல் ஆகியவை வெளியிடப் பட்டன. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டிருக்கும் நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இப்பட்டி யல் வழங்கப்படும். இத்துடன் அனைத்து சட்ட மன்றத் தொகுதிகளிலும் உள்ள மாநகராட்சி, சார் ஆட்சியர், கோட்டாட்சியர் அலுவலகங் கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநக ராட்சி மண்டல அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் பொது மக்கள் பார்வைக்காக வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டிருக்கும். வாக்காளர்கள் இந்த பட்டியலைப் பார்த்து தங்கள் பெயர் இடம் பெற்றிருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வதற்கான மனுக் களை டிசம்பர் 9ஆம் தேதி வரை வழங்கலாம். இதற்காக நவம்பர் 4, 5 மற்றும் 18, 19 ஆகிய நான்கு விடுமுறை நாட்களில் அனைத்து வாக் குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இங்கு படிவங்களை வாங்கி பொது மக்கள் பெயர் சேர்த்தல், நீக் கல் மற்றும் திருத்தம் செய்வதற்கு விண்ணப் பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக் கப்பட்டு தகுதியுள்ளவை சேர்க்கப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் 2024ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்படும். சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் ஜனவரி 1ஆம் தேதி 18 வயது பூர்த்தியடை யும் வாக்காளர்களும் மற்றும் 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் 1, ஜுலை 1, அக்.1 ஆகிய தேதி களில் 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர் களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்ப தற்கான படிவம்-6ஐ பூர்த்தி செய்து முன்கூட் டியே அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள் ளது, அப்படி முன்னதாகப் பெறப்படும் படி வங்கள் அடுத்தாண்டில் அந்தந்த காலாண் டில் (ஏப்., ஜூலை, அக்டோபர்) தகுதி நாள் அடையும்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும். வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுக ளில் திருத்தம் செய்ய விரும்புவோர், பெயர் நீக்கம் செய்ய விரும்புவோர் மற்றும் ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள், முகவரி மாற்றம் செய்வது போன்ற கோரிக் கைகள் தொடர்பாக, உரிய படிவங்களில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறும்போது சமர்ப்பிக்கலாம். அத்து டன் http://voters.eci.gov.in/ என்ற இணை யதளத்திலும், Voter HelpLine App என்ற அலைபேசி செயலி மூலமாகவும் விண்ணப் பங்களை சமர்ப்பிக்கலாம். மேலும், வாக்காளர்கள் தங்களது விருப் பத்தின்பேரில், வாக்காளர் அடையாள அட் டையுடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகராட்சி துணை ஆணையர் அ.சுல்தானா, உதவி ஆணையர் வினோத், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், தேர்தல் வட்டாட்சியர் தங்கவேல் ஆகி யோர் கலந்து கொண்டனர்.