districts

கொங்கு காயர்ஸ் என்ற நார்மில்லை துவங்கக்கூடாது

ஈரோடு, நவ. 18- இச்சிப்பாளையத்தில் கொங்கு காயர்ஸ் என்ற நார்மில்லை துவங்கக்கூடாது என விவ சாயத் தொழிலாளர்கள் கொடுமுடி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு காவல்துறை யின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஈரோடு மாவட்டம், இச்சிப்பாளையத்தில் கொங்கு காயர்ஸ் என்ற நார்மில்லை துவங் கக்கூடாது என்று கடந்த 2019 ஆம் ஆண்டு  முதல் அந்த கிராம மக்கள் போராடி வரு கின்றனர். இதுகுறித்து கிராம சபையில் தீர் மானம் நிறைவேற்றியுள்ளனர். ஆனால், கிராம சபை தீர்மானத்தை திருத்தி அனுமதி  அளிக்க முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.  இதனைடுத்து, கடந்த 4 ஆம் தேதியன்று கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற ஊர் கூட் டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படை யில் அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்த திட்ட மிட்டு இருந்தனர். ஆனால், ஆர்ப்பாட்டத் திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், திங்களன்று கொடுமுடி வட்டார  வளர்ச்சி அலுவலகம் முன்பு 300க்கும்  மேற்பட்டோர் தடையை மீறி ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் கே.பி கனகவேல் தலைமை வகித்தார். இதில், சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் கே. சண்முகவள்ளி,  உழைக்கும் மக்கள் தொழிற்சங்கத்தின் சார் பில் சி .முருகேசன், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் எம் .சசி, விவசாய தொழி லாளர் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் அமிர்த லிங்கம், மாதர் சங்கத்தின் சார்பில் நிர்மலா,  ஓய்வு பெற்ற வட்டாட்சியர் ராஜ்குமார் உள் ளிட்ட தலைவர்கள் கண்டனவுரை நிகழ்த் தினர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலரி டம் மனு கொடுக்கப்பட்டது.