districts

img

ஜனநாயகத்தில் நம்பிக்கையுடைவரா? விழிப்புடன் இருங்கள்

ஜனநாயக நாட்டில் தேர்தல்  முறையில் பல்வேறு சீர்திருத்தங் கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் வாக்குச்சீட்டு முறை  நடைமுறையில் இருந்தது. பின்னர்.  தற்போது இயந்திரங்கள் பயன்பாட் டில் உள்ளது. பாசிச ஒன்றிய பாஜக ஆட்சியில் அதன் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளது. வாக்க ளிக்க பணம் பெறுவதும் குற்றம்,  கொடுப்பதும் குற்றம் என்கிற முழக் கம் தொடர்ந்து எதிரொலித்தாலும், வாக்கிற்கு பணம் கொடுக்கும் ஜன நாயக படுகொலைகள் பல பகு தியில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இதில் எப்போதுமே நாங்கள் வித்தியாசமான கட்சி என சொல்லிக்கொள்ளும் பாஜக, வாக்குக்கு பணம் கொடுப்பதை விட, வென்றவர்களை விலைக்கு  வாங்கும் வி(சித்திர)த்தியா சத்தை நிருபித்தனர். இதற்கு நாடு  முழுவதும் ஏராளமான உதார ணங்கள் உள்ளன. இப்போது பாஜக அதையும் தாண்டி தேர்தல்  ஆணையத்தையே தங்களின் கைப் பாவையாக பயன்படுத்திக் கொள்கிறது என்கிற பரவலான  குற்றச்சாட்டை நிராகரிப்பதற்கு இல்லை என்கிற நிலையே உள் ளது. இப்போது உச்சத்திற்கே சென்ற பாஜக, தேர்தல் அலுவலர் கள் அறிவிக்கும் வேட்பாளர்கள் தான் அதிகாரத்திற்கு வருவார்கள்.  அந்த தேர்தல் அதிகாரியையே விலைக்கு வாங்கிய அவலம் நாட் டில் நடந்துள்ளது. அதன் உதார ணம் தான் நடந்து முடிந்த சண்டி கர் மேயர் தேர்தல்.  இந்த ஜனநாயக படுகொ லையை கண்டு நாடே அதிர்ச்சிக் குள்ளாகியது.  ஆம் ஆத்மி கட்சி  தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன் றத்திற்கு சென்றது. உச்சநீதிமன்ற  நீதியரசர்களே அதிர்ச்சியில் உறைந்து போயினர். இதனைய டுத்துதான் இதுபோன்ற நடவடிக் கைகளை நீதிமன்றம் வேடிக்கை பாரத்துக் கொண்டிருக்காது என வும், பாஜக வெற்றி செல்லாது, ஆம் ஆத்மி கட்சியினரே மேயர் என் றும், தேர்தல் அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, ஜனநாயகத்தைக் காக்கும் வகை யில் தீர்ப்பு அளித்துள்ளது.  இதுகுறித்து இந்தியா கூட்டணி யில் அங்கம் வகிக்கும் கட்சியி னர் மற்றும் அரசியல் இயக்கத் தவர்களிடம் தீக்கதிர் நாளிதழுக் காக கருத்து கேட்கையில் அவர் கள் கூறியதாவது,  கணேசமூர்த்தி எம்பி (மதிமுக)  பாஜகவின் மோசடிகளை வெளிக் கொணர்ந்த தீர்ப்பு. தேர்தல் தில்லு முல்லுகள் நடப்பதற்கு இது சாட்சி யாக அமைந்தது.முறையான தீர்ப்பு. எதிர்பார்த்த தீர்ப்பு. பாஜக வினரின் தில்லுமுல்லுகளை தடுத்து நிறுத்துவதற்கான தீர்ப் பாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது என்றார்.  திருச்செல்வம் (காங்கிரஸ்) தேர்தல் மோசடிகளில் பாஜக ஈடுப டுகிறது என்பது ஊருக்கே தெரி யும். ஓட்டு சீட்டிலேயே குறிப்பாக  மிகச் சொற்ப வாக்குச் சீட்டுகளி லேயே இத்தனை மோசடி செய் தால், நாடாளுமன்ற பொதுத்தேர் தலில் எத்தனை லட்சம், கோடி வாக்குகளில் என்னென்ன செய் வார்கள் என்பதற்கு இது ஒரு சான்று  என்றார்.  ஏ.சித்தீக் (மனிதநேய மக்கள்  கட்சி மாவட்டத் தலைவர், ஈரோடு  கிழக்கு மாவட்டம்) நாடு முழுவதும் பாஜகவினர் இப்படித் தான் செய்து கொண்டுள்ளனர். வாக்கு இயந்திரத்தை வைத்துத்தான் வெல்ல பார்க்கிறது. தேர்தல் அதி காரிகள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் தவறு செய்யும் போது ஜனநாய கத்திற்கு எங்கே செல்வது? எனவே  வாக்குப்பதிவு இயந்திரத்தை தடை  செய்ய வேண்டும் என்றார்.  முகம்மது ஆரிப் (முஸ்லிம் லீக்)  இன்று இருக்கின்ற உச்ச நீதிமன்ற நீதிபதியைப் பொறுத்தவரை ஜன நாயகத்தைப் பாதுகாக்கும் கடமை யில் ஆர்வமாக இருக்கிறார். பாஜக வினர் தங்களின் ஆட்சி அதிகாரத் தைத் தக்கவைத்துக் கொள்ள  எந்த நிலைக்கும் கீழிறங்குவார்கள் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பு நம்பிக்கையை அளிக்கிறது. அந்த  நம்பிக்கை இந்தியாவில் இன் னும் இருக்கிறது. மக்களிடையே  விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக் கிறது. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது, கட்சியை உடைப்பது என்பது பழைய பாணி. அமலாக் கத்துறை உள்ளிட்ட அரசு எந்திரங் களையே தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில் சட்டம்  இயற்றியுள்ளது. எனவே பாஜக வினருக்கு ஆதரவாகத்தான் தேர் தல் அலுவலர்கள் முடிவுகளை அறி விப்பார்கள் என்பதன் முன்னோட் டமே சண்டிகர் மேயர் தேர்தல்.  ஜனநாயகத்தில் நம்பிக்கையுடை யோர் விழிப்புடன் இருக்க வேண் டும் என்றார். - தொகுப்பு – எஸ்.சக்திவேல்