உதகை, செப்.4- பேரிடர் கால ஒத்திகை பயிற்சி வியாழனன்று நடை பெற்றது. மலை மாவட்டமான நீலகிரியில் தென்மேற்கு மற்றும் வட கிழக்கு பருவமழை காலங்களில் மரம் விழுதல், மண்சரிவு போன்ற பேரிடர்கள் அடிக்கடி ஏற்படும். இதைச் சமாளிக்கும் வகையில், உதகையில் உள்ள பைன் ஃபாரஸ்ட் சுற்றுலாத் தலத்தில், காமராஜர் அணையில் மீட்புப் பணிகள் குறித்த ஒத்திகை நடைபெற்றது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டவர்களைக் காப்பாற்றுவது, மரங்கள் விழுந்து அல்லது மண்சரிவில் சிக்கியவர்களை மீட்பது, அவர்களுக்கு முத லுதவி சிகிச்சை அளிப்பது போன்ற செயல்முறை விளக்கங் கள் தத்ரூபமாக நிகழ்த்திக் காட்டப்பட்டன. இந்த ஒத்திகையை அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்த்த னர்.
 
                                    