districts

img

ரேசன் கடைகளில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு முன்னுரிமை

கோவை, ஜூன் 28-  ரேசன் கடைகளில் பொருட்களை வாங்க  வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதிய வர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர் களை விரைந்து அனுப்ப வேண்டும் என  வழங்கல் அதிகாரிகள் பங்கேற்ற கண்கா ணிப்பு கூட்டத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தி னார்.  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் மாவட்ட மற்றும் வட்ட வழங்கல் அதிகாரி கள் பங்கேற்ற கண்காணிப்பு கூட்டம் நடை பெற்றது. கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சி யர் ஜி.எஸ்.சமீரன், மாவட்ட வருவாய் அலு வலர் ப்பி.அலெக்ஸ் மற்றும் மாவட்ட மற்றும்  அனைத்து வட்ட வழங்கல் வட்டாட்சியர்கள் பங்கேற்றனர். இதில், ரேசன்கடைகளில் வருகிற பொருட்களின் அளவு, தரம் ஆகி யவைகள் குறித்தும், பொதுமக்கள் பயன் பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது. இக்கூட் டத்தில் பி.ஆர்.நடராஜன் எம்பி பேசுகை யில், ரேசன் கடைகளில் உள்ள ஜியோ மெட் ரிக் முறையில் விரல் ரேகை பதிந்து பொருட் கள் வழங்கப்படுகிறது. இதில் உண்மை யான பயனாளிகளாக இருந்த போதிலும் அவர்களின் விரல் ரேகை பதிவு பொருந்துவ தில்லை. ஜியோ மெட்ரிக் இயந்திரத்தின்  குறைபாடால் பொதுமக்கள் அலைகழிக்கப் படுவதாக தகவல்கள் வருகிறது. இந்த குறைபாட்டை போக்கி பொதுமக்களை அலைகழிப்புக்குள்ளாக்காமல் மாற்று ஏற் பாட்டில் பொருட்களை கொடுத்து அனுப்ப வேண்டும். மேலும், ரேசன் கடைகளுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதிய வர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தி முன் னுரிமை கொடுத்து அவர்களுக்கான பொருட்களை கொடுத்து விரைந்து அனுப் பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள் ளிட்ட ஆலோசனைகளை முன்மொழிந்தார். இதனைத்தொடர்ந்து, பேசிய வழங்கல் துறை அதிகாரிகள் விரல் ரேகை பொருந் தாமல் உள்ளவர்களுக்கு மாற்று ஏற்பாடாக விண்ணப்பங்கள் மூலம் பூர்த்தி செய்து பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனை மேலும் எளிமைப்படுத்துவதற்கான முயற் சிகளை மேற்கொள்வதாகவும், இதர கோரிக்கைகள் குறித்து உரிய பரீசிலனை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தனர்.

;