districts

img

நோய்தாக்குதாலால் சாமந்தி பூ அழிப்பு பாதிக்கப்பட்ட விவசாயி இழப்பீடு வழங்க கோரிக்கை

தருமபுரி, டிச.2- நோய்த்தாக்குதலால் சாமந்தி பூ முற்றிலும் அழிந் துள்ள நிலையில் பாதிக் கப்பட்ட விவசாயி இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத் துள்ளார். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் தொப்பூர் அருகே உள்ள புதூர் கிராமத்தை சேர்ந் தவர் பள்ளிகுடத்தான் (எ) மாரியப்பன் (72).  இந்த வய திலும் தொடர்ந்து தன்னு டைய 2 ஏக்கர் பரப்பளவு  கொண்ட விவசாய நிலத்தில் விவசாயம்  செய்து வருகிறார். மேலும் ஆடு, மாடு  வளர்த்து வருகிறார். கடந்த நான்கு  மாதங்களுக்கு முன்பு சாமந்தி பூக்களை  தன்னுடைய நிலத்தில் நடவு செய்தார்.  இதற்காக நர்சரியில் முதல் தரமான பூ நாற் றினை ஒரு நாற்று  ரூ.3க்கு விலை கொடுத்து  வாங்கி வந்து நடவு செய்துள்ளார்.  இதில் ஒரு ஏக்கர் பரப்பளவில் இரண்டு  தருணங்களாக அறுவடை செய்யும் அள விற்கு இரண்டு மாத இடைவெளியில் நடவு  செய்துள்ளார்.  

தொடர்ந்து பராமரித்து வந்த  நிலையில் மொட்டுக்கள் விரிந்து பூக்கள் பூக்கும் தருணத்தில் தொடர் நோய் தாக் குதல் ஏற்பட்டுள்ளது.  இதற்காக பூச்செடிகளையும், பூக்க ளையும் பாதுகாக்க பூச்சிக்கொல்லி மருந் தையும் தொடர்ந்து தெளித்துள்ளார். இருப் பினும் நோயின் பாதிப்பும், வீரியமும் குறைய வில்லை. இதனால் சாமந்தி தோட்டத்தில் பூக்கள் பூத்தும் ஒரு பூ கூட அறுவடை செய்யும் முன்பே அனைத்தும் நோயால் முழுமையாக தாக்கப்பட்டது. இதனால் மன முடைந்த விவசாயி மாரியப்பன் வேறு வழி யின்றி தோட்டம் முழுவதையும் டிராக்டர் கொண்டு செடி, பூக்கள் உள்ளிட்டவற்றை அழித்தார்.  இதுகுறித்து விவசாயி மாரியப்பன் கூறும்போது, இந்த பூக்கள் நடவு செய்வ தற்கு முன்பு டிராக்டர் கொண்டு உழவு  செய்த கடனையே இதுவரை என்னால் கொடுக்க முடியவில்லை. தற்பொழுது பூக் களும் அழிந்து விட்டதால் மற்ற கடன்களை எல்லாம் எவ்வாறு அடைப்பது என்பது தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்.  தமிழக அரசு எங்களைப் போல பூக்கள்  பயிரிடும் விவசாயிகளையும் சற்று ஏறெடுத்து  பார்த்து இது போல கடுமையான பாதிப்புகள்  ஏற்படும் போது இழப்பீடு வழங்க வேண்டும்  என மாவட்ட நிர்வாகத்திற்க்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை வைத்தார்.

;