districts

img

பல் மருத்துவ கண்காட்சி

சேலம், ஜூலை29- இந்திய பல் மருத்துவர் சங்கத்தின் தமிழ்நாடு கிளை  சார்பாக பல் மருத்துவ கண் காட்சி சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சனி மற்றும் ஞாயிறன்று வரை நடைபெற்றது.  இந்த கண்காட்சியை மாநிலத் தலைவர் பேபி ஜான்  துவக்கி வைத்தார்.  இதில் பல்  மருத்துவம் சார்ந்த நவீன கருவிகள், அறுவை சிகிச்சை கருவிகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் என நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இக்கண்காட்சியை மருத்துவ கல்லூரி மாணவ,  மாணவிகள் மற்றும் பொது மக்கள், பல் மருத்துவர்கள்  திரளானோர் பார்வை யிட்டனர்.