சர்வதேச குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு டெங்கு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசா யம் வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அரசு மகளிர் பள்ளியில் டாக்டர் அப்துல் கலாம் நண்பர் குழு மற்றும் சேந்தமங்கலம் அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, குழு ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமை வகித்தார். அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் ஜெயந்தி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் என திரளானோர் பங்கேற்றனர்.