districts

img

நகராட்சியில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

அவிநாசி, மே 19- திருமுருகன்பூண்டி நகராட்சியில் உள்ள  தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, மாவட்ட ஊரக உள் ளாட்சி துறை ஊழியர்கள் சங்கத்தினர் புத னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவல கம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்ட ஊரக உள்ளாட்சி துறை ஊழி யர்கள் சங்க மாவட்டத் தலைவர் சி.பழனி சாமி தலைமை வகித்தார். செயலாளர் கே. ரங்கராஜ், நகர் மன்ற உறுப்பினர்கள் பி. தேவராஜ், எஸ்.பார்வதி, பி.சுப்பிரமணியம், விவசாய சங்க மாவட்ட நிர்வாகி வெங்கடாச லம், சிஐடியு ஒன்றிய நிர்வாகி பாலசுப்பிர மணியம் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.  இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து  நகராட்சி தலைவர் குமாரிடம் அளித்த மனு வில் கூறியிருப்பதாவது, 27 வார்டுகளை  கொண்ட திருமுருகன்பூண்டி நகராட்சியில் 120 துப்புரவு பணியாளர்கள், 34 கொசு  மருந்து அடிப்பவர்கள், 19 குடிநீர் பணியாளர் கள் என 173 பணியாளர்கள் உள்ளனர். இவர் கள் அனைவருமே தற்காலிக பணியாளர்க ளாக 5 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை பணியாற்றி வருகிறார்கள். நிரந்தர துப்புரவு பணியாளர்கள் 8 பேர் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில், தற்காலிக பணியாளர்களுக்கு வழங்கப்படும் ரூ.510  தினக்கூலி சம்பளமும் நேரடியாக வழங்கப் படததால் பலர் வங்கியில் கடன் கூடபெற முடியாத நிலையில் உள்ளனர்.  மேலும், அரசு விடுமுறையோ, வார விடுமுறையோ கிடையாது. இவர்களுக்கு முகக் கவசம், கையுறை, காலணிகள், குப்பை எடுத்து செல்வதற்கான தள்ளு வண்டிகளின் பராமரிப்பு கூட நகராட்சி நிர்வாகத்தால் ஏற்படுத்தி தரப்படுவ தில்லை. மேற்கண்ட கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.