தருமபுரி, ஜூலை 26- பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த கோரி தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி, சேலம், கோவை, ஈரோடு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதி யத்தில் 40 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் சத்துணவு அங் கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், வன பாதுகாவலர்கள் உள்ளிட்ட அனை வருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களுக்கு கருவூ லம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு ஊழியர் களுக்கு ஜனவரி 2022 முதல் 3 சதவிகித அகவிலைப்படி அறி வித்துள்ளது. அதுபோல், மாநில அரசு ஊழியர்களுக்கும் 3 சத விகித அகவிலைப் படியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி வரன்முறை செய்திட வேண்டும். தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள 4 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்ஒருபகுதியாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு தருமபுரி அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன் தலைமை தாங்கினார். இதில், மாநில துணைத்தலைவர் கோ.பழணியம் மாள், மாவட்ட செயலாளர் ஏ.சேகர், மாவட்ட பொருளாளர் கே.புகழேந்தி, மகளகர்துணைக்குழு மாவட்ட அமைப்பாளர் பி.எஸ்.இளவேணில் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் பல்வேறு அரசுத்துறை சங்கத்தின் நிர்வாகி கள் உரையாற்றினர்.
சேலம்
இதேபோன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத் தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர் சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் ந. திருவேரங்கன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இதில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் வே. அர்த்தநாரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில துணைத்தலைவர் கோ. சுகுமார் அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பு.சுரேஷ் மாவட்ட பொருளாளர் கே.செல்வம் உள்ளிட்டு அனைத்து துறை சங்க தலைவர் செயலாளர்கள் உரை யாற்றினர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் ராக்கி முத்து தலைமை வகித்தார். இதில், அரசு ஊழியர் சங்கம் மாநில துணை பொதுச்செயலாளர் மு.சீனிவாசன், மாவட்ட செய லாளர் விஜயமனோகரன், வருவாய் துறை குமரேசன் உட்பட துறைவாரி சங்க தலைவர்கள் பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
கோவை
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். தலைமை மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். இதில், சத்துணவு ஊழியர் சங்க முன் னாள் மாநில தலைவர் கே.பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் செந்தில்குமார் மற்றும் வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.மகேஷ்வரன் உள்ளிட்டோர் உரையாற்றி னர்.