districts

img

பாசிசத்தை வீழ்த்தி இந்தியாவை பாதுகாப்போம்!

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் கே.சுப்பராயனுக்கு கதிர் அரிவாள்  சின்னத்தில் வாக்கு சேகரித்து மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி பவானி தாலுகா கமிட்டி யின் சார்பில் பவானி சட்டமன்ற தொகுதி முழுவதும் பிரச்சாரம் நடைபெற்றது. குருப்பநாயக்கன்பாளையத்தில் பவானி தாலுகா செயலாளர் எஸ்.மாணிக்கம் தலை மையில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் தொடங்கியது. 3 ரோடு, சன்னியாசிபட்டி, கேசரிமங்கலம், சித்தார், கோனேரிப்பட்டி பிரிவு, அம்மாபேட்டை, பூதப்பாடி, ஊஞ்ச பாளையம், பூனாச்சி, கவுண்டனூர், வெள்ளி திருப்பூர், நால்ரோடு ஆகிய பகுதியில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் நடைபெற்றது. இப்பிரச்சாரத்தின் போது, கட்சியின் மாவட்டச் செயற்குழு, மாவட்டக் குழு மற்றும் தாலுகா நிர்வாகிகள், உறுப்பி னர்கள் பலர் கலந்து கொண்டனர்.