districts

img

அடிப்படை பிரச்சனையை தீர்க்கக்கோரி சிபிஎம் போராட்டம்

அவிநாசி, ஆக.27- அடிப்படை பிரச்சனைகளை தீர்க் கக்கோரி, புதுப்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், சிபிஎம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற் றும் பொதுமக்கள் செவ்வாயன்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன் றியம், புதுப்பாளையம் ஊராட்சிக் குட்பட்ட, 11ஆவது வார்டுக்குட்பட்ட சோடா கடை சந்து, ஆர்ஜிஎம் வீதி,  கோல்டன் நகர் உள்ளிட்ட இடங்க ளில் சுமார் 400 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக ளில் சாக்கடை மற்றும் சாலை வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதி களும் செய்து தரப்படவில்லை. மேலும், சோடா கடை சந்தில் கழிவு நீர் வெளியேற முடியாமல் தேங்கி  நிற்பதால் சுகாதார சீர்கேடு நிலவு கிறது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எவ்வித நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை. இந்நி லையில், இப்பகுதியின் அடிப்படை  பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த  ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் உள்ளி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனையறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், பேச்சு வார்த்தை நடத்தி, கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றி தருவதாக உறுதியளித்ததையடுத்து அனைவ ரும் கலைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கட்சியினர் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து, சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.  முன்னதாக இந்த போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சேர்ந்த ஊராட்சி மன்ற உறுப்பி னர் தேவிகா தலைமையில் நடை பெற்றது. இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர் குமரவேல், கட்சியின்  ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மோகனசுந்தரம், முருகன், மாவட்டக் குழு உறுப்பினர் பழனிசாமி, கிளைச் செயலாளர் ராமகிருஷ்ணன், கதிர் வேல், வாலிபர் சங்க ஒன்றியச் செய லாளர் ஹனிபா உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.