districts

img

தருமபுரி நகராட்சி 6 ஆவது வார்டில் சிபிஎம் வேட்பாளர் தீவிர வாக்குசேகரிப்பு

தருமபுரி, பிப்.10- தருமபுரி நகராட்சி 6 ஆவது வார்டுக்குட்பட்ட கணேசா காலனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எஸ்.கிரைஸாமேரி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தருமபுரி நகராட்சி 16 ஆவது வார்டில் திமுக தலைமை யிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கிரைஸா மேரி போட்டியிடுகிறார். இந்நிலையில், 6 ஆவது வார்டுக் குட்பட்ட கணேசா காலனி பகுதி மக்களிடம்  வாக்குசேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில், திமுக கிளை செயலாளர் டி.பழனி, சிபிஐ கிளை செயலாளர் சேட்டு, சிபிஎம் மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். மல்லிகா, நகர செயலாளர் ஆர்.ஜோதிபாசு, ஒன்றிய செயலா ளர்கள் என்.கந்தசாமி, எஸ்.எஸ்.சின்னராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.குப்புசாமி, கே.பூபதி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.