districts

img

சாக்கடை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு: ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில் சிபிஎம் வலியுறுத்தல்

அவிநாசி,மார்ச் 25- கணியாம்பூண்டி பகுதி சாக்கடை கழிவுநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு  ஏற்படுத்த வேண்டும் என அவிநாசி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கூட்டத் தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் வலியுறுத்தியுள்ளார். அவிநாசி ஊராட்சி ஒன்றிய கவுன் சிலர் கூட்டம் ஒன்றிய சேர்மன் ஜெக தீசன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் மனோக ரன் முன்னிலை வகித்தார். இக்கூட் டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் முத் துசாமி பேசுகையில், கணியாம் பூண்டி ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் சாக்கடை நீர்  பல வருடங்களாக விடப்பட்டு வந் தது. தற்பொழுது அந்த நீர் செல்லும்  பாதை மாற்றம் செய்யப்பட்டு விட்டது. இதிலிருந்து, கழிவு நீர்  வெளியே செல்வதால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இப்பி ரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண  வேண்டும்.  மங்கலம் சாலை முதல்  வஞ்சிபாளையம் வரை உணவ கங்கள், தனியார் பள்ளிக்கூடங்கள் முன்பு பேரிகார்டுகள் வைக்கப்பட் டுள்ளது. இப்படி வைப்பதற்கு யாரிடத்தில்  அனுமதி பெற்றார்கள்? தேவையில் லாமல் பேரிகார்டு வைப்பதை தவிர்க்க வேண்டும். வஞ்சிபாளை யம் அரசு பள்ளியில் சாக்கடை கால் வாய் முழுமையாக அமைக்கப்பட வில்லை. கூடுதல் நிதி ஒதுக்கி முழு மையாக சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என தெரிவித் தார்.  இதைதொடர்ந்து, திராவிட முன் னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஒன்றிய  கவுன்சிலர் சேது மாதவன் பேசுகை யில், தேவம்பாளையம் மயானத் திற்கு காம்பவுண்ட் சுவர் ஏற்படுத்தி தர வேண்டும். பெரியாயிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தபால் நிலையத்தை சீரமைத்து தர வேண்டும். பெரியாயிபாளையத்தில் உள்ள பால்வாடி மையத்திற்கு காம்பவுண்ட் சுவர் அமைத்து தர  வேண்டும் என தெரிவித்தார். இதுகு றித்து சேர்மன் ஜெகதீசன் வட்டார வளர்ச்சி அலுவலர், மனோகரன் ஆகி யோர் விரைவில் தீர்க்கப்படும் என தெரிவித்தனர்.

;