districts

img

பேருந்து வசதி கூட இல்லாத இடத்தில் நீதிமன்றம் அமைப்பதா?

நாமக்கல், ஜன.28- குமாரபாளையம் அருகே போதிய பேருந்து வசதி கூட இல்லாத இடத்தில் நீதிமன்றம் அமைக் கப்படுவதற்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும்  வழக்கறிஞர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் சாலை, எம்.ஜி.ஆர்.நகர் பேருந்து நிறுத்தம் அருகே தற்காலிகமாக நீதிமன் றம் செயல்பட்டு வருகிறது. சொந்த கட்டடம் கட்ட  பல இடங்களில் ஆய்வு செய்த நிலையில், ஆனங் கூர் சாலை மேட்டுக்கடை பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நாமக் கல் மாவட்ட பொறுப்பு நீதிபதிகளான பாலாஜி, அப்துல் குத்தூஸ் ஆகிய இருவரும் நேரில் ஆய்வு செய்தனர். இந்நிலத்தின் அருகே உயர் மின்ன ழுத்த கோபுரங்கள் உள்ளதை கண்டு, மின்வாரிய அதிகாரிகள் வசம் விபரங்கள் கேட்டறிந்தனர். இந் நிலையில், இந்த இடத்தில் நீதிமன்றம் கட்டினால் போதிய பாதுகாப்பு இல்லாத நிலை, வெகு தொலைவு, மின்வாரிய உயர் கோபுர விபத்து அபாயம், பொதுமக்கள் எதிர்ப்பு உள்ளிட்ட கார ணங்களை வலியுறுத்தி இந்த இடத்தில் நீதிமன் றம் கட்ட குமாரபாளையம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிபதிகளிடம் மனு அளித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் பொதுநல ஆர்வலர்கள் கூறுகையில், நீதிமன்றம் கட்ட மேட் டுக்கடை சரியான இடம் அல்ல. ஏனெனில் போது மான பேருந்து வசதி கிடையாது. அதிக குடியிருப்பு கள் அப்பகுதியில் கிடையாது. மக்கள் நடமாட்ட மும் அதிகம் இருக்காது. இதனால் பாதுகாப்பு இல் லாத நிலை ஏற்படும். வழக்கு சம்பந்தமாக இந்த  இடத்திற்கு பெண்கள் வந்து செல்வது என்பது சாத்தியமானது அல்ல. சரியான பேருந்து வசதி இல்லாத காரணத்தால் பேருந்திற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படும். ஆளில்லாத இடத்தில் பெண்கள் காத்திருந்து பேருந்தில் ஏற வும் முடியாது. சமீபத்தில் பள்ளிபாளையம் பகுதி யில் வயதான மூதாட்டிகளை கொலை செய்த  சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பணம் வைத்திருக்க பாதுக்காப்பான இடம் இது அல்ல, என்றனர். குமாரபாளையம் வழக்கறிஞர் சங்க தலை வர் சரவணராஜன் கூறுகையில், மேட்டுக்கடை அருகே உள்ள இடம் போதிய பாதுகாப்பு இல்லாத இடம். உயர் மின்னழுத்த கம்பிகள் இருப்பதால் விபத்து அபாயம் உள்ளது. இதற்கு எங்கள் சங்கம் சார்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். அதற்கு மாறாக மற்றொரு இடமும் காண்பித்து உள் ளோம். அதனை தேர்வு செய்வது குறித்து பரி சீலனை செய்கிறோம் என்று நீதிபதிகள் கூறினர். சார்பு நீதிமன்றம் அமைக்க, பள்ளிபாளையம் சாலை, கே.ஓ.என்.தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள வாடகை கட்டிடத்தை நீதிபதிகள் பார்வையிட்டனர். புதிய கட்டிடம் கட்டிய பின், தற் போது செயல்பட்டு வரும் குற்றவியல் நீதிமன் றம், உரிமையியல் நீதிமன்றம் மற்றும் சார்பு நீதி மன்றம் உள்பட மூன்று நீதிமன்றங்களும் புதிய கட்டிடத்தில் செயல்படும், என்றனர்.