அவிநாசி, ஏப்.3- அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் சனியன்று நடைபெற்ற ஏலத்தில் ரூ.71லட்சத்து 87ஆயிரத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் நடை பெற்றது. அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் சனியன்று பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி, இவ்வாரம் பருத்தி ஏலத்திற்கு மொத்தம் 2108 பருத்தி மூட்டைகள் வந்தி ருந்தன. சென்ற வாரத்தைவிட 1000 பருத்தி மூட்டைகள் அதிக மாக வந்திருந்தன. கோடைக்கால பருத்தி வரத்து அதிக ரித்து இருந்தது. இதில், ஆர்.சி.எச். பி.டி. ரகப்பருத்தி குவிண் டால் ஒன்றுக்கு ரூ. 10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரத்து 569 வரையிலும், டிசிஎச். ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் 700 வரையிலும், கொட்டு ரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 முதல் ரூ.6,000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.71 லட்சத்து 87ஆயிரத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் நடை பெற்றது. இந்த ஏலத்தில், ஆத்தூர், மேட்டூர், கோபி, நம்பியூர், மலையப்பாளையம், சத்தியமங்கலம், கொள்ளேகால், அந்தியூர், அத்தாணி, அவிநாசி, புளியம்பட்டி, குன்னத் தூர் ஆகிய பகுதிகளிலிருந்து 465 பருத்தி விவசாயிகளும், கோவை, ஈரோடு பகுதியிலிருந்து 36 பருத்தி வியாபாரி களும் பங்கேற்றனர்.