districts

img

தோழர் ஸ்டாலின் நினைவகம் கட்டட அடிக்கல் நாட்டு விழா

சேலம், மார்ச் 20- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேச்சேரி ஒன்றி யக்குழு அலுவலக கட்டடப்பணிக்கு அடிக்கல் நாட்டப்பட் டது. சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேச்சேரி ஒன்றியக் குழு அலுவலகமான ஸ்டாலின் நினைவகம் அடிக்கல் நாட்டு விழா மேச்சேரி கோல்காரனூரில் எழுச்சியோடு நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜி. மணிமுத்து தலைமை ஏற்றார். எம்.ரத்தினவேல் முன்னிலை வகித்தார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, அலுவலகம் கட்டடப் பணிகளை துவக்கி வைத்தார். இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமமூர்த்தி, ஓமலூர் ஈஸ்வரன், எடப்பாடி பெரியண்ணன், கொங்கனாபுரம் முத்துசமி, மேட்டூர் வசந்தி உள்ளிட்டோர் உரையாற்றினார்.