districts

img

தோழர் கே.நாராயணன் மறைவு: தலைவர்கள் அஞ்சலி

நாமக்கல், ஆக.2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சிஐடியு நாமக்கல் மாவட்ட முன்னாள் செயலாளருமான தோழர் கே.நாராயணன் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சிஐ டியு நாமக்கல் மாவட்ட முன்னாள் செயலாளரும், மாநிலக் குழு உறுப்பினருமான தோழர் கே.நாராயணன் வியாழ னன்று உயிரிழந்தார். கேரளம் மாநிலம், பாலக்காட்டில் வைக் கப்பட்டிருந்த அவரது உடலுக்கு சிபிஎம் நாமக்கல் மாவட் டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஏ.ரங்கசாமி, எம்.அசோகன், என்.வேலுச்சாமி, கே. தங்கமணி, பி.ஜெயமணி, எஸ்.சுரேஷ், ஏ.டி.கண்ணன் மற்றும்  ஈரோடு கே.துரைராஜ், சேலம் வி.கே.வெங்கடாசலம், நகரச்  செயலாளர் என்.சக்திவேல் மற்றும் சிஐடியு நாமக்கல் மாவட் டத்தைச் சேர்ந்த தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தி, அவரது  குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர்.