districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

போலி “உறவு முறை” சான்றிதழ் விற்பனை காவல் நிலையத்தில் புகார்

கோவை, ஆக.8- கோவையில் போலி “உறவு முறை” சான்றிதழ் தயா ரித்து விற்பனை செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி  மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கோவை, பொன்னையா ராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திரன். இவர் நகை பட்டறை தொழில்  செய்து வருகிறார். இவரது மகன் அர்ஜுன் (18). இவர் வெளிநாடு வாழ் இந்தியர் கோட்டாவில் மருத்துவ படிப் பில் சேர விண்ணப்பம் செய்து இருந்தார். இதற்காக அவ ருக்கு உறவுமுறை (ரிலேஷன்ஷிப் சர்டிபிகேட்) சான்றி தழ் தேவைப்பட்டது. அப்போது அர்ஜுனனின் தந்தை யின் நண்பரான இடையர்பாளையம் மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவர் உறவு சான்றிதழ் பெற்று தர உதவி செய்வதாக கூறி  உள்ளார். இதைத் தொடர்ந்து உறவு சான்றிதழ் வாங்கி கொடுப் பதற்கு ஒரு ரூ.10 ஆயிரம் பணத்தை அர்ஜுன் வெள்ளி யங்கிரியிடம் கொடுத்து உள்ளார். அதன் பிறகு கடந்த ஏப் ரல் மாதம் 11 ஆம் தேதின்று அந்த சான்றிதழை அர்ஜுனி டம் வெள்ளியங்கிரி கொடுத்து உள்ளார். அதை வைத்து  அர்ஜுன் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான விண்ணப் பத்தை ஆன்லைன் மூலம் அனுப்பி உள்ளார். இந்நிலை யில், கடந்த மாதம் 24 ஆம் தேதியன்று தமிழ்நாடு மருத் துவ தேர்வு குழு அவரது விண்ணப்பத்தை நிராகரிப்பு  செய்தது. அதற்கான காரணத்தை ஆய்வு செய்த போது அர்ஜுன் சமர்ப்பித்த உறவுமுறை சான்றிதழ் போலியா னது என கூறப்பட்டது. இதனால் அர்ஜுன் உடனே இது குறித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத் திற்கு சென்று விசாரித்தார். அப்போது போலியான ரப்பர்  ஸ்டாம்ப் உதவியுடன் சீல் வைக்கப்பட்டு போல சான்றி தழ் தயாரிக்கப்பட்டது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி  அடைந்த அர்ஜுன் வெள்ளியங்கிரி மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை வெரைட்டி ஹால் காவல் நிலை யத்தில் புகார் செய்தார். அதன் பேரில் காவல் துறையி னர் வெள்ளியங்கிரி மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்த போலி சான்றிதழ் தயா ரித்து கொடுத்த விவகாரத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக  காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார் கள். இதில் பலர் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.

புலியை கண்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

உதகை, ஆக.8- மாயார் பகுதியில் சாலையோரம் உள்ள வனப்பகுதி யில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த புலியை அவ்வழி யாக சென்ற சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து மகிழ்ந்த னர். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும்  மழை காரணமாக வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சியளிப்பதால் புலி, சிறுத்தை, மான் உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படு கிறது. இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகத் திற்குட்பட்ட வெளிமண்டல வனப் பகுதியில் அமைந் துள்ள மாயார் பகுதியில் புலியின் நடமாட்டம் அதி கரித்து காணப்படுகிறது. குறிப்பாக மசினகுடியிலி ருந்து மாயார் செல்லும் சாலையோரம் உள்ள வனப் பகுதியில் புலி ஒன்று ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தது. இதனை அவ்வழியாக வாகனங்களில் சென்ற சுற்று லாப் பயணிகள் கண்டு ரசித்ததோடு மட்டுமல்லாமல் வீடியோ புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்க்க மானியம்

ஈரோடு, ஆக.8- கிறிஸ்தவ தேவாலயங்களை பழு துபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணி கள் மேற்கொள்வதற்கு அரசு மானியம் வழங்குவது தொடர்பான விபரங்களை  ஈரோடு ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சொந்தக் கட்டடங்க ளில்  இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங் களை பழுதுபார்த்தல் மற்றும் புனர மைத்தல் பணிகள் மேற்கொள்ள மானி யத் தொகை வழங்கும் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. தேவாலயங் கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த  கட்டடத்தில் இயங்கியிருக்க வேண்டும்.  தேவாலயத்திற்காக வெளிநாட்டிலி ருந்து எவ்வித நிதி உதவியும் வாங்கியி ருக்க கூடாது. அவ்வாறு ஒரு தேவால யத்திற்கு மானியத்தொகை வழங்கிய  பின்னர் 5 வருடத்திற்கு அத்தேவால யம் இம்மானியத் தொகை வேண்டி விண்ணப்பிக்க தகுதியற்றது.  தற்போது கூடுதலாக பணிகளை  மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட் டுள்ள பணிகளின் விவரம். தேவாலயங் களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி  அமைத்தல், குடிநீர்வசதிகள் உருவாக் குதல், சுவிசேஷம் வாசிக்கும் ஸ்டாண்ட், மைக்செட் மற்றும் ஒலிப் பெருக்கி, நற்கருணை பேழை பீடம்  போன்ற ஆலயங்களுக்கு தேவையான  உபகரணங்கள் மற்றும் தேவாலயத் திற்கு சுற்றுச்சுவர் அமைக்க திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேவாலய கட்டடத்தின் வயதிற்கேற்ப  மானியத் தொகை உயர்த்தப்பட்டுள் ளது. 10 முதல் 15 வருடம் வரை ஆன  தேவாலய கட்டிடங்களுக்கு ரூ.10 லட்ச மும், 15 முதல் 20 வருடம் ஆன கட்டிடங் களுக்கு ரூ.15 லட்சமும், 20 வருடத் திற்கு மேல் உள்ள தேவாலய கட்டிடத் திற்கு ரூ.20 லட்சமும் மானியத் தொகை  உயர்த்தி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி விவரம் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடக்கும் இடங்கள்

திருப்பூர், ஆக. 8 - திருப்பூர் மாவட்டத்தில் ஆக. 9 ஆம் தேதி சனியன்று தாரா புரம் நகராட்சி வார்டு எண் 3,14,16 ஆகிய பகுதிகளுக்கு தாராபு ரம் சேமலைக்கவுண்டர் திருமண மண்டபத்திலும், திருமுரு கன்பூண்டி நகராட்சி வார்டு எண் 1,2,11 ஆகிய பகுதிகளுக்கு  பாலாஜி நகர் சமுதாயக் கூடத்திலும், ருத்ராவதி பேரூராட்சி  வார்டு எண் 1,2,3,4,7,8,15 ஆகிய பகுதிகளுக்கு ருத்ராவதி  மாரியம்மன் கோவில் மண்டபத்திலும், குடிமங்கலம் ஊராட்சி  ஒன்றியத்திற்குட்பட்ட வீதம்பட்டி ஊராட்சிக்கு வீதம்பட்டி  மாரியம்மன் கோவில் மண்டபத்திலும், தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்னபுத்தூர், கோவிந்தபுரம் ஊராட் சிகளுக்கு கோவிந்தாபுரம் குமரப்ப வேளாளர் மண்டபத்தி லும், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எரிச னம்பாளையம் ஊராட்சிக்கு மூலனூர் எஸ்.ஜே.எம் மண்டபத் திலும் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

ஆதிதிராவிடர் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம்

திருப்பூர், ஆக 8 – திருப்பூர் கோவில்வழியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல  உயர்நிலைப்பள்ளியில் கணிதப் பாடத்திற்கு பட்டதாரி ஆசிரி யர் ஒருவர், அங்குள்ள தொடக்கப் பள்ளியில் இடைநிலை  ஆசிரியர் ஒருவர் மற்றும் கண்டியன்கோயில் ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர் ஒருவர் என  மூன்று ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட  உள்ளனர். தகுதியுள்ளவர்கள் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை  5 மணிக்குள் திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்கு டியினர் நல அலுவலருக்கு விண்ணப்பிக்கும்படி ஆட்சியர்  மனிஷ் நாரணவரே கூறியுள்ளார்.

ஆக.15இல் கிராமசபை கூட்டங்கள்
திருப்பூர், ஆக. 8 – திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளிலும்  சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று கிராம சபைக் கூட்டம்  நடத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே  தெரிவித்துள்ளார். அன்று காலை 11 மணியளவில் ஊராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் கிராம சபைக் கூட்டம் நடைபெறும். கிராம  நிர்வாகம், பொது நிதி செலவினம், தணிக்கை அறிக்கை, நூறு  நாள் வேலை திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், ஜல்  ஜீவன் திட்டம் உள்ளிட்ட பொருட்கள் குறித்து விவாதிக்கப் படும்.  ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவல கத்திலிருந்து பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கிராம மக்கள் இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு ஆட்சியர் மனிஷ் நார ணவரே கேட்டுக் கொண்டுள்ளார்.

பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

திருப்பூர், ஆக.8 - தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய பயிர் வாரி யாக கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி அவி நாசி சுற்றுவட்டார கிராமப் பகுதிகளை சேர்ந்த விவசாயிக ளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தோட்டக்கலை உதவி இயக்குநர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, இயற்கை  சீற்றங்களால் ஏற்படும் சேதாரத்தை ஈடுசெய்யும் வகையில்,  தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய பயிர் வாரியாக  கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், வாழை, மஞ்ச ளுக்கு அவிநாசி வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங் கள், மரவள்ளி, வெங்காயத்துக்கு ராமநாதபுரம், கருவலூர்,  உப்பிலிபாளையம், தெக்கலூர், நம்பியாம்பாளையம், வேட் டுவபாளையம், செம்பியநல்லூர், வேலாயுதம்பாளையம், புதுப்பாளையம், பொங்கலூர், ஆலத்தூர், மங்கரசுவலயபா ளையம், குட்டகம், புலிப்பார், தத்தனூர், புஞ்சைத்தாமரைக் குளம், வடுகபாளையம், சேவூா், பாப்பான்குளம், போத் தம்பாளையம், தண்டுக்காரன்பாளையம், முறியாண்டாம் பாளையம், கானூர் ஆகிய கிராமங்கள் தோ்வு செய்யப் பட்டுள்ளன. வாழை, மஞ்சள், மரவள்ளி ஆகிய பயிா்களுக்கு  செப்டம்பா் 16 ஆம் தேதிக்குள்ளும், வெங்காயத்துக்கு செப்ட ம்பர் 1 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம். காப்பீடு  செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல் (பயிர்  மற்றும் சாகுபடி செய்யப்பட்டுள்ள பரப்பு பதிவு செய்திருத்தல்  வேண்டும்), ரேஷன் அட்டை, ஆதாா் அட்டை நகல்கள், வங்கிக் கணக்கு புத்தக நகல், ஆதாா் அட்டையுடன் இணைக் கப்பட்டுள்ள கைப்பேசி எண் உள்ளிட்ட ஆவணங்களுடன் அவிநாசி மேற்கு ரத வீதியில் உள்ள இ-சேவை மையம் மூலம்  காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம். இது தொடா்பான கூடு தல் விவரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநா் - 98945- 98701, தோட்டக்கலை அலுவலர் 99429-67244, காப்பீட்டு நிறுவ னம் 70101-50913 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கண்ணா கல்லூரியில் பி.ஜி. முதல் கட்ட கலந்தாய்வு

திருப்பூர், ஆக. 8 - திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல் லூரியில் முதுநிலைப் பட்ட வகுப்புகளுக் கான முதல்கட்டக் கலந்தாய்வு வரும் திங்கட் கிழமை நடைபெறும் என கல்லூரி முதல்வர்  வ.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கு உரிய முது நிலைப் பட்ட வகுப்புகளுக்கு மாணவர்  சேர்க்கைக்கான சிறப்பு ஒதுக்கீட்டிற்கு கலந் தாய்வு ஆகஸ்ட்  11 திங்கட்கிழமை அன்று  காலை 9.30 மணியளவில் சிக்கண்ணா அரசு  கலைக்கல்லூரியில் அந்தந்த துறைகளில் நடைபெறும். பொதுப் பிரிவினருக்கான கலந் தாய்வு ஆகஸ்ட் 13 புதன் கிழமை காலை கல் லூரி வளாகத்தில் நடைபெறும். தமிழக அரசின் இட ஒதுக்கீடு மற்றும் மதிப் பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். கல்லூரியில் எம்.ஏ. தமிழ் இலக்கியம் (18), ஆங்கில இலக்கியம்  (18), பொருளியல் (18), எம்காம் (40), எம்காம்  சர்வதேச வணிகம் (40), எம்.எஸ்ஸி கணினி  அறிவியல் (25), இயற்பியல் (30), வேதியியல்  (16), கணிதம் (25), விலங்கியல் (40), ஆடை  வடிவமைப்பு மற்றும் நாகரிகம் (20) ஆகிய  முதுநிலைப் பட்டவகுப்புகள் (மொத்த இடங் கள் 290) செயல்பட்டு வருகின்றன. கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பித்தவர்களின் உத்தேச தரவரி சைப்பட்டியல் www.cgac.in என்ற கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும், மாணவர்கள் விண்ணப்பித்தபோது தங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கும், செல்பேசி எண் ணிற்கும் தகவல் தெரிவிக்கப்படும். அதன டிப்படையில் மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம். கலந்தாய்விற்கு வரு பவர்கள் தங்கள் இளநிலைப் பட்ட வகுப்பின்  அனைத்துப் பருவங்களின் மதிப்பெண்பட்டி யல், மாற்றுச்சான்றிதழ், சாதிச் சான்றிதழ், 10,11 மற்றும் +2 மதிப்பெண் பட்டியல், பாஸ் போர்ட் அளவு நிழற்படங்கள் 6, மற்றும் கல்லூ ரிக்குச் செலுத்த வேண்டிய கட்டணத் தொகை யுடன் வர வேண்டும். மாணவருடன் பெற் றோர் கண்டிப்பாக வர வேண்டும். முதுநி லைப் பட்ட முதலாம் ஆண்டு மாணவர்க ளுக்கு ஆகஸ்ட் 20 முதல் வகுப்புகள் தொடங் கும் என்று முதல்வர் கிருஷ்ணன் தெரிவித் துள்ளார்.

தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு 36 ஆவது மாநாடு சேலத்தில் இன்று துவங்குகிறது

சேலம், ஆக. 8 – தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் 36 ஆவது மாநாடு சேலத்தில், சனி யன்று துவங்குகிறது. 9 ஆம் தேதி முதல் 11 ஆம்தேதி வரை  இம்மாநாடு நடைபெற உள்ளது. சேலம் மாநகரில், திருவாக வுண்டனூர் பைபாசில் உள்ள வர லக்ஷ்மி மஹால், நடைபெற உள்ள  இம்மாநாட்டில், தமிழகம், கேர ளம் மற்றும் பாண்டிச்சேரி பகுதி களை சேர்ந்த சங்கத்தின் பிர திநிதிகள் பங்கேற்கின்றனர். துவக்க மாநாடு சனியன்று, மெய்யனூர் பகுதியில் உள்ள விஎஸ்டி மோட்டார் அருகே இருந்து பேரணி காலை 9.30 மணிக்கு புறப்படும். இதில் அகில  இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர்கள் அமா னுல்லாகான், ஸ்ரீ காந் மிஸ்ரா, வேணுகோபால், ரவீந்திரநாத், எம்.கிரிஜா மற்றும் தென் மண் டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்ட மைப்பின் நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். இம்மாநாட்டை, அகில இந் திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர்  அசோக் தாவ்லே, வர வேற்பு குழு தலைவர் டி.எம்.செல்வகணபதி எம்பி., உள்ளிட் டோர் பங்கேற்க உள்ளனர். மாநாட்டை முன்னிட்டு, வலு வான எல்ஐசி, வலிமையான இந்தியா மற்றும் மக்கள் ஒற்று மையை வலியுறுத்தும் வகை யில் மாரத்தான் போட்டி சேலம் காந்தி ஸ்டேடியத்தில் ஞாயிறு  காலை 6.15 மணிக்கு துவங்கும் என மாநாட்டு வரவேற்புக்குழு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஆணையரும் இல்லை, பொறியாளரும் இல்லை குமாரபாளையம் நகராட்சியின் சோகம்

நாமக்கல், ஆக. 8 -  குமாரபாளையம் நகராட்சியில் ஆணை யர், பொறியாளர் என இருவரும் இல்லாத  நிலையில், மக்களின் அடிப்படை பிரச்சனை கள் தீர்க்ப்படாமல், பணிகள் தேங்கிக்கிடப்ப தாகவும், உடனடியாக இந்த இடத்தை நிரப்ப  வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள் ளது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகள், ஒரு லட்சத்திற் கும் மேலான பொதுமக்கள், பெருமளவி லான குடியிருப்பு பகுதிகள் உள்ள பகுதி யாகும். இந்த நகராட்சியில் பல மாதங் களாக நிரந்தர ஆணையர் இல்லாமல், பொறியாளர் ராஜேந்திரன், நகராட்சி பணி களை நிர்வகித்து வந்தார். தற்போது ஜூன் மாத இறுதியில் அவரும் பணி ஓய்வு பெற் றார். ஆணையாளராக தற்காலிகமாக திருச் செங்கோடு, ராசிபுரம் என பல்வேறு நக ராட்சியிலிருந்து ஆணையர் வந்து கொண்டி ருந்தனர். தற்போது சேலம் மாவட்டம் மேட்டூ ரிலிருந்து நித்யா என்பவர் பொறுப்பு ஆணை யராக வந்து கொண்டுள்ளார்.  முக்கிய பொறுப்புகளில் உள்ள இருவ ரும் இல்லாததால், குடிநீர் விநியோகம், குடி நீர் மேல்நிலைதொட்டி அமைத்தல், வடி கால் அமைத்தல், வரி வசூல் பணிகள் கவ னித்தல் முடங்கி உள்ளது. மேலும், அரசு சார் பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள் ளிட்ட பல முக்கிய அலுவலகங்களில் நடத் தப்படும் ஆலோசனை கூட்டங்களில் பங் கேற்று, நகராட்சியின் வளர்ச்சி குறித்து பேச வும் பொருப்பான அதிகாரிகள் இல்லாத நிலை உள்ளது.  நகராட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, விரைவில் நிரந்தர ஆணையா ளர், பொறியாளர் நியமிக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவல் நிலையத்தில் கட்டிடத் தொழிலாளி தற்கொலை இரண்டாவது நாளாக காவலர்களிடம் நீதிபதி விசாரணை

கோவை, ஆக.8 - கோவையில் காவல் நிலையத்தில் கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், காவல் துறை யினரிடம், இரண்டாவது நாளாக நீதிபதி  விசாரணை மேற்கொண்டார். கோவை, பேரூர் அருகே உள்ள ராம செட்டிபாளையம் காமராஜ் நகரை சேர்ந் தவர் ராஜன் என்ற அறிவொளி ராஜன்.  கட்டிடத் தொழிலாளியான இவர் கடந்த  5 ஆம் தேதியன்று இரவு கோவை பெரிய  கடை வீதியில் உள்ள காவல் நிலையத் தில் சென்று முதல் தளத்தில் இருக்கும்  குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் அறையில் தூக்கு போட்டு தற் கொலை செய்து கொண்டார். அதைப் பார்த்த காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக காவல் துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தற் கொலை செய்து கொண்ட ராஜன் மன  நலம் பாதிக்கப்பட்டவர் போன்று செயல் பட்டு வந்ததும், தற்கொலை செய்வதற்கு  முன்பு கோவை நீதிமன்ற வளாகத்தில் புகுந்து தன்னை சிலர் கொலை செய்ய  வருவதாக, கூறி தகராறு செய்ததும், அவரை ஊழியர்கள் சமாதானப்படுத்தி அனுப்பியதும் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்யப் பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட் டது. அப்பொழுது உறவினர்கள்  ராஜ னின் உடலில் காயங்கள் ஏதும் இருக் கிறதா ? சந்தேகம் ஏதும்? இருந்தால் கூறுங்கள் என்று காவல் துறையி னர் தெரிவித்தனர். அவர்களும் உடலை  சோதனை செய்து அவருடைய இறப்பில்  எவ்வித சந்தேகமும், இல்லை என்று தெரி வித்தனர். அவர் வீட்டில் அடிக்கடி தன்னை பலர்  கொலை செய்ய வருவதாக கூறிக் கொண்டே இருப்பார் என்றும், அந்த பயத் தில் தான் தற்கொலை செய்து கொண்டார்  என்றும் உறவினர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை ஐந்தாவது ஜூடிசியல் நீதிமன்ற நீதிபதி வெர்ஜினி வெஸ்டா சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். சம்பவம் நடந்த போது பணியில் இருந்த  காவல் துறையினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து அவர் வியாழ னன்று இரண்டாவது நாளாக பெரிய கடை வீதி காவல் நிலையத்திற்கு சென் றார். அந்தக் காவல் நிலையத்தில் சட்டம் -  ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவுவில் பணி யாற்றி வரும் காவல் துறையினரிடம்  விசாரணை நடத்தினார். காவல்  துறையினர் தனித் தனியாக சந்தித்து  யாருக்குமே தெரியாமல் அவர்  காவல் நிலையத்திற்குள் புகுந்தது  எப்படி? என்பது உள்பட பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை நடத் தினார்.

அணைகள் நிலவரம் (வெள்ளிக்கிழமை)

பவானிசாகர் அணை
நீர்மட்டம்:101.94/105அடி 
நீர்வரத்து:3057கனஅடி
நீர்திறப்பு:3000 கனஅடி
சோலையார் அணை
நீர்மட்டம்:160.05/160அடி
நீர்வரத்து:1267கனஅடி
நீர்திறப்பு:1321கனஅடி
பரம்பிக்குளம் அணை
நீர்மட்டம்:71.60/72 அடி
நீர்வரத்து:1978கனஅடி
நீர்திறப்பு:2160கனஅடி
ஆழியார் அணை 
நீர்மட்டம்:118/120அடி
நீர்வரத்து:814கனஅடி
நீர்திறப்பு:851கனஅடி
திருமூர்த்தி அணை 
நீர்மட்டம்:51.67/60அடி 
நீர்வரத்து:942கனஅடி
நீர்திறப்பு:1093கனஅடி
அமராவதி அணை
நீர்மட்டம்:88.36/90அடி
நீர்வரத்து:680கனஅடி
நீர்திறப்பு:607கனஅடி