districts

img

தாராபுரம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் ரூ.34.41 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் தொடக்கம்

 தாராபுரம், ஜூன் 28 - தாராபுரம் ஊராட்சி ஒன்றி யம் கவுண்டச்சிபுதூர் ஊராட் சியில் ரூ.34.41 லட்சம் மதிப் பில் வளர்ச்சி பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ஊராட்சியில் 14 மற் றும் 15ஆவது மாநில நிதிக் குழு திட்டத்தின் கீழ் ரூ.34.41 லட்சத் திற்கான பல்வேறு பணிகள் மேற்கொள்ள  பூமி பூஜை நடைபெற்றது. ஊராட்சி ஒன்றி யக்குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் பணிகளைத் தொடங்கி வைத்தார். இவ்வி ழாவிற்கு ஊராட்சிமன்றத் தலைவர் செல்வி  ரமேஷ் தலைமை வகித்தார். வட்டார  வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) கே. கே.ஜீவானந்தம், ஊராட்சி ஒன்றிய குழு  துணைத் தலைவர் சசிக்குமார், கவுண்டச்சி புதூர் ஊராட்சி துணைத்தலைவர் நாச்சி முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது 1ஆவது வார்டு அசோக் நகரில்  ரூ.4 லட்சத்தில் போர்வெல் அமைத்து சின் டெக்ஸ் தொட்டி அமைத்தல், சகுனிபாளை யத்தில் ரூ.2.70 லட்சத்தில் பைப்லைன் விஸ் தரித்தல், பாலசுப்ரமணியம் நகரில் ரூ.4 லட் சத்தில் பைப்லைன் அமைத்தல், 3ஆவது  வார்டு சமத்தூர் பகுதியில் ரூ.3.23 லட்சத்தில்  குடிநீர் குழாய் விரிவாக்கம், 6 ஆவது வார்டு  சேரன்நகர், எல்லீஸ்நகர் பகுதிகளுக்கு ரூ.6  லட்சத்தில் சாக்கடை வசதி அமைத்தல், கொட்டாப்புளிபாளையத்தில் ரூ.2.50 லட்சத் தில் கான்கிரீட் சாலை அமைத்தல், 5 ஆவது  வார்டில் ரூ.6 லட்சம் மதிப்பில் சாக்கடை  அமைத்தல், 7 ஆவது வார்டு சலவையாளர்  காலனியில் ரூ.4 லட்சத்தில் பைப்லைன் விஸ்தரித்தல், தனலட்சுமி நகர் மற்றும் பாத் திமா நகரில் ரூ.1.90 லட்சத்தில் பைப்லைன் விஸ்தரித்தல் ஆகிய பணிகள் மொத்தம் ரூ.34.41 லட்சத்தில் செய்யப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் தெய்வசிகாமணி, வார்டு உறுப்பினர்கள் நர் மதா ஈஸ்வரன், தனலட்சுமி நாகராஜ், புனிதா  கார்த்திக்செல்வன், குப்புசாமி, பாலசுப்ர மணியம் உள்ளிட்ட அனைத்து வார்டு உறுப் பினர்களும் கலந்து கொண்டனர். முடிவில்  ஊராட்சி செயலர் பெரியசாமி நன்றி கூறி னார்.

;