districts

img

தோல் உரிந்த நிலையில் வந்தவர் குணமடைந்தார் கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு பாராட்டு

கோவை, ஜூன் 15– டாக்சிக் எபிடேர்மெல் நேக்ரோ லைசிஸ் என்கிற நோயால் அவதிப் பட்டு உடல் முழுவதும் உள்ள தோல் உரிந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டவர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பினர். இத்தகைய அர்ப்ப ணிப்பு மிக்க பணியை மேற்கொண்ட  அரசு மருத்துவர்களுக்கு கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை முதல்வர் நிர்மலா பாராட்டுக் களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அரசு மருத்துவ மனை முதல்வர் நிர்மலா கூறுகை யில், தோல் முழுவதும் உரிந்த நிலை யில் அரசு மருத்துவமனையில், உடு மலைபேட்டை, எரிசனம்பட்டியைச் சேர்ந்த முருகவேல் (35) என்பவர் கடந்த 40 நாட்களுக்கு முன்பு அனு மதிக்கப்பட்டார். டாக்சிக் எபிடெர் மெல் நெக்ரோலைசிஸ் என்கிற  இந்த நோய், மாத்திரை ஒவ்வாமை மற்றும் கிருமிதொற்றினால் ஏற்படு கிறது. இந்நோய் தாக்கம் ஏற்பட்ட வர்களின் உடலில் சிவப்பு கொப் பளங்கள் தோன்றி, பின் தோல்  உரிந்து வரும்.வாய், ஆசனவாய் போன்ற இடங்களிலும் புண் ஏற்ப டும். தோல் முழுவதும் உரிந்து வந்த  நிலையில், கிருமிகளின் தொற்று ஏற் பட்டு, உள் உறுப்புகள் செயலிழக்க  நேரிடும். இதனால் 50 முதல் 80 சதவி கித இறப்பு நேரிட வாய்ப்புள்ளது. இருந்தபோதும், முருகவே லுக்கு முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப் பட்டது.

மருத்துவர்கள், செவிலியர் கள் அவரை தனி தீவிர சிகிச்சைப் பிரி வில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், தற்போது முழுமை யாக அவர் குணமடைந்து, வீடு திரும்புகிறார். தனியார் மருத்துவம னையில் இந்த சிகிச்சைக்காக 8  முதல் 10 லட்சம் ரூபாய் வரை செல வாகும் நிலையில், முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இந்த நோயாளிக்கு கோவை அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட் டது. பொதுமக்கள் மருத்துவர் ஆலோ சனையின்றி வலி மாத்திரையோ, வேறு மாத்திரைகளையோ உட் கொள்ளக்கூடாது. தோலில் கொப்ப ளம், ஊறல், வலி, வீக்கம் போன் றவை ஏற்பட்டால் உடனே மருத்துவ மனையில் தோல் பிரிவில் ஆலோ சனை மற்றும் சிகிச்சை பெற்றுக்  கொள்ள வேண்டும், என்றார். முன்னதாக, பாதிக்கப்பட்ட முரு கவேலுக்கு சிறப்பான சிகிச்சைய ளித்து நோயாளியின் உயிரை மீட் டுக்கொடுத்த தோல் பிரிவு தலைவர் முத்துக்குமரன் மற்றும் இவருடன் இனைந்து சிகிச்சையளித்த பிற மருத்துவர்கள், செவிலியர்களை மருத்துவமனை முதல்வர் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.

;