districts

img

கோவை செபஸ்தியார் சிலை தாக்குதல் சம்பவம் ;இந்து முன்னணியினர் 4 பேர் கைது

தேவாலயத்தில் இருந்த புனித செபஸ்தியர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சிறுவர் உள்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.

கோவை, ராமநாதபுரம் சந்திப்பு அருகில் ட்ரினிட்டி தேவாலயம், பள்ளி உள்ளது. இதன் வாயிலில் புனித செபாஸ்தியரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை அடையாளம் தெரியாத நபர்கள் திங்கள்கிழமை சேதப்படுத்தினர்.

இச்செயலுக்கு மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், கட்சிகள், பொதுமக்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக ராமநாதபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய கோவை வெள்ளலூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மதன்குமார் (23), ராம நாதபுரம் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுவன் ஆகியோரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

இவர்கள் இருவரும் இந்து முன்னணி அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

அரியலூர் சம்பவத்தை தொடர்பு படுத்தி இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து சதித் திட்டம் தீட்டுதல், சமூக அமைதியைக் குலைக்க முயற்சித்தல், அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், சிறுவனை சீர்திருத்த பள்ளியிலும், மதன்குமாரை சிறையிலும் அடைத்தனர்.

மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய மருதாசலமூர்த்தி, தீபக் ஆகி யோரை போலீஸார் தேடி வந்த நிலையில் வியாழனன்று தீபக்கையும், வெள்ளியன்று மருதாச்சல மூர்த்தியையும் போலீசார் கைது செயதனர். இவர்கள் அனைவரும் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

;