districts

img

இயல்பு நிலைக்கு திரும்பும் கோவை விமான நிலையம்

கோவை, ஜூன் 16- கொரோனா நோய்த்தொற்று பர வல் காலகட்டத்தை தொடர்ந்து, கோவை விமான நிலையத்தில் பல  நாடுகளுக்கு விமான சேவையில்லா மல் இருந்தது. தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி விமான சேவை அதி கரித்துள்ளதால் தொழில் துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை சர்வதேச விமான நிலை யம் கொரோனா நோய் தொற்று பரவ லுக்கு முன்பு நாள்தோறும் 35 விமா னங்கள் வரை இயக்கப்பட்டு வந்தது. ஆண்டுதோறும் 30 லட்சம் பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு பின்னர்  பயணிகள் போக்குவரத்து மிகக்கடு மையாக பாதிக்கப்பட்டது. தினமும் 5 விமானங்கள் மட்டுமே இயக்கப் பட்டு வந்தன. நாடு முழுவதும் விமான  நிலையங்களின் நிலை இதுவாகவே இருந்தது. இந்நிலையில், நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப் பூசி திட்டம், நோய் தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகள் அமல்படுத்தப்பட்டது.

தற்போது கொரோனா தொற்று பரவல்  வெகுவாக குறைந்துள்ளது. இதனால்  நாடு முழுவதும் விமான நிலையங்க ளில் பயணிகளின் எண்ணிக்கை மற் றும் விமான சேவை அதிகரித்து வரு கிறது. இதேபோன்று கோவை விமான நிலையம் மெல்ல இயல்பு நிலைக்கு  திரும்பி வருகிறது. தினமும் இயக்கப் படும் விமானத்தின் எண்ணிக்கை, உள் நாடு மற்றும் வெளிநாட்டு போக்கு வரத்து பிரிவு இரண்டையும் சேர்த்து  28 ஆக அதிகரித்துள்ளது. கோவை யிலிருந்து ஷார்ஜா, சிங்கப்பூர், தில்லி,  சென்னை, மும்பை, பெங்களூரு, ஐத ராபாத், பூனா உள்ளிட்ட பல்வேறு பகு திகளுக்கு விமானங்கள் இயக்கப் பட்டு வருகிறது. இதுகுறித்து தொழில் துறையினர் கூறுகையில், கொரோனா நோய்த் தொற்று பரவல் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் விமான போக்குவரத் தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்ப டுத்தியது. தற்போது கோவை உட்பட அனைத்து விமான நிலையங்களிலும் இயல்பு நிலைக்கு திரும்பி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. சுற்றுலா, தொழில், கல்வி, ஆன்மீக பயணம் என் பன உள்ளிட்ட பல்வேறு காரணங்க ளுக்காக கோவை விமான நிலையத்தை பயன்படுத்தி வரும் மக்களின் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. இத னால் அனைத்து துறைகளிலும் குறிப் பிடத்தக்க வளர்ச்சி காணப்படுகிறது.  இது கோவை உட்பட மேற்கு மண்ட லத்தின் கீழ் உள்ள அனைத்து மாவட் டங்களின் வளர்ச்சியிலும் மிகப்பெரிய அளவில் பங்களிக்கும், என்றனர்.

விமான நேரம் மாற்றம் - அதிகாரிகள் தகவல்

விமான நிலையங்களில் ஓடுதளம் பராமரிப்பு பணி 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படுவது வழக்கம். அதன்படி கோவை சர்வதேச விமான நிலையத்தில் சமீபத்தில் இந்தப் பணிகள் தொடங்கப்பட்டன. இதன் காரண மாக காலை 6 மணி முதல் இரவு 10 மணிக்குள் அனைத்து விமான சேவைகளும் நிறைவு பெறும் வகையில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை - ஷார்ஜா இடையே இயக்கப்படும் ஏர் அரேபியா விமானம் அதிகாலை 3:30 மணிக்கு தரையிறங்கி மீண்டும் 4:15 மணியளவில் புறப்பட்டு செல்லும். ஓடுதள பராமரிப்பு பணி காரணமாக வியாழனன்று முதல் ஏர் அரேபியா விமானம் இயக்கப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. வாரத்தில் தற்போது 5 நாட்கள் கோவை - ஷார்ஜா இடையே விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் வியாழனன்று முதல் காலை 6:30 மணிக்கு தரையிறங்கி மீண்டும் காலை 7:20 மணியளவில் ஷார்ஜா புறப்பட்டுச் செல்லும் வகையில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.