districts

img

திருப்பூரில் கூட்டுறவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், மார்ச் 4- திருப்பூர் மாவட்ட கூட்டுறவு ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரேசன் கடை ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப் படியை காலதாம தம் செய்யாமல் உடனடியாக வழங்க வேண் டும். ப்ராக்ஸி முறைக்கு மாற்று ஏற்பாடு செய்து சர்வர் பிரச்சனையை சரி செய்து குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் பெற ஏதுவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாயவிலை கடைகளுக்கு சரியான எடை அளவில், தரமான பொருட்களை அனுப்ப வேண்டும். பணி வரன்முறை செய்யப் படாத பணியாளர்களை உடனடியாக பணி வரன்முறை செய்து அவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக் கைகளை வலியுறுத்தி சிஐடியு திருப்பூர் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலை வர் ப.கௌதமன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செய லாளர் கே.மகேந்திரன் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில செய லாளர்  ஏ.நிசார் அகமது, கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட துணை செயலாளர் பி.முரு கன் ஆகியோர் பேசினர். நிறைவாக மாவட்ட பொருளாளர் பி. சுரேஷ் நன்றி கூறினார்.