districts

img

ஈரோடு உழவர் சந்தையில் முதல்வர் வாக்கு சேகரிப்பு

ஈரோடு, மார்ச் 31- ஈரோடு சம்பத் நகரில் உள்ள உழ வர் சந்தை பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19  ஆம் தேதி நடைபெறவுள்ள நிலை யில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி  வேட்பாளர்களை ஆதரித்து தமிழ் நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு  பகுதியாக ஞாயிறன்று மாலை ஈரோடு, சின்னியம்பாளையத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட் டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டா லின் பங்கேற்று இந்தியா கூட்டணி வேட்பாளர்களான ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ், நாமக்கல் தொகுதி கொமதேக வேட் பாளர் மாதேஸ்வரன், கரூர் காங்கி ரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஆகி யோரை ஆதரித்து பிரச்சாரம் மேற் கொண்டார். இதற்காக சனியன்று இரவு  ஈரோடு வந்த முதல்வர் பெருந்துறை சாலையில் உள்ள தனியார் விருந் தினர் இல்லத்தில் தங்கினார். ஞாயி றன்று காலை ஈரோடு, சம்பத் நகரில் உள்ள உழவர் சந்தைக்கு வந்த முதல்வர் இந்தியா கூட்டணி சார்பில் ஈரோடு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை  ஆதரித்து பொதுமக்கள் மற்றும் வியா பாரிகளிடம் நடந்து சென்று வாக்கு  சேகரித்தார். அப்போது பொதுமக்க ளில் சிலர் அளித்த கோரிக்கை மனுக் களையும் அவர் பெற்றுக் கொண் டார். நடந்து சென்று வாக்கு சேக ரிப்பில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலினுக்கு உழவர் சந்தை விவசாயிகள், சந் தைக்கு வந்திருந்த பொதுமக்கள் கை  குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். அப் போது விவசாயிகள் மற்றும் உழவர்  சந்தைக்கு வந்திருந்த பொதுமக்க ளில், ஆண்கள், பெண்கள், முதியவர் கள், குழந்தைகள், இளைஞர்கள் என  அனைவரும் அவருடன் தற்படம் (செல்பி) எடுத்து மகிழ்ந்தனர். மேலும் முதல்வரை நேரில் கண்ட மகிழ்ச்சியில் தற்படம் எடுக்க முடியா மல் பதற்றமடைந்த பெண் ஒருவரி டம் அவரது கைப்பேசியை தானே வாங்கி அவருடன் நின்று தற்படம் எடுத்துக் கொடுத்தார் முதல்வர்.  மு.க.ஸ்டாலின் உழவர் சந்தைக்கு வந்திருக்கும் தகவலறிந்த சம்பத்  நகர் மற்றும் பல்வேறு பகுதி மக்க ளும் உழவர் சந்தை சாலையின் இரு புறமும் திரண்டனர். உழவர் சந்தை யில் இருந்து வெளியில் வந்த முதல் வர் நடந்து வந்து அவர்களிடமும் கை  குலுக்கி வாக்கு சேகரித்தார். மேலும் முதல்வரை பார்ப்பதற்கு பெற்றோரு டன் வந்த சிறுவர், சிறுமியர்கள் கூட்ட  நெரிசலில் அருகில் செல்ல முடியா மல் தவித்தனர். அதை கவனித்த முதல் வர் சிறுவர், சிறுமிகளை அருகில் அழைத்து தனது பேரன், பேத்திகளை அரவணைப்பது போன்ற அருகில்  நிறுத்தி தற்படம் எடுத்தும், கை கொடுத் தும் மகிழ்ந்தார். அதைபோல் பொது மக்கள் அனைவரிடமும் மிக எளிமை யாக அவர் பேசியது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இத னைத்தொடர்ந்து, ஈரோடு - பெருந் துறை சாலையில் உள்ள தனியார்  விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்த முதல்வரை ஈரோட்டை சேர்ந்த பல் வேறு வணிக அமைப்பினர் நேரில்  சந்தித்து கோரிக்கைகள் குறித்த மனுக்களை அளித்தனர். ஈரோடு,  கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங் களை சேர்ந்த சுமார் 20 அமைப்பு களை சேர்ந்த நிர்வாகிகள் முதல் வரை நேரில் சந்தித்து திமுக கூட்ட ணிக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிகழ்வுகளில் வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு மக்களவைத் தொகுதி வேட் பாளர் கே.இ.பிரகாஷ், அந்தியூர் செல் வராஜ் எம்.பி., முன்னாள் எம்எல்ஏ வி.சி.சந்திரகுமார் மற்றும் திமுக நிர் வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள்  என ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.