districts

img

சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்காதீர்

உதகை, மார்ச் 24- சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் உதகை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சிஐடியுவினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். உதகை தாவரவியல் பூங்கா வையொட்டிய சாலைகளில் பல  ஆண்டு காலமாக சாலையோர வியாபாரிகள் சிறுசிறு கடை களை வைத்து பிழைப்பு நடத்தி  வருகின்றனர். சமீப காலமாக நக ராட்சி நிர்வாகமும், காவல்துறை யும் இணைந்து வியாபாரிகள் கடை களை அப்புறப்படுத்தும் முயற்சி யில் ஈடுபட்டு வருகிறது. வாழ்வா தாரமே இந்த சிறு கடைகள்தான் என்கிற நிலையில், போக்குவரத்து இடையூறு போன்ற காரணங்கள் இருந்தால், அதனை முறைப் படுத்த பல வழிகள் உள்ளது. ஆனால், அதிரடியாக கடைகளை  அப்புறப்படுத்தினால் வியாபாரி கள் வாழ்வதற்கு வேறு வழி  இல்லாமல் தவிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. உதகை நக ராட்சி நிர்வாகத்தின் நடவடிக் கையை கண்டித்து சிஐடியு சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  முன்னதாக, நகராட்சி நிர் வாகம் மூலம் நிரந்தரமாக கடை களை கட்டி சாலையோர வியா பாரிகள் அனைவருக்கும் பராபட்ச மின்றி வழங்க வேண்டும். அது வரை, வியாபாரிகள் கடைகள் போடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மாவட்ட தலைவர் எல்.சங்கரலிங்கம் தலைமை ஏற்றார். சிஐடியு மாவட்ட பொருளாளர் நவீன் சந்திரன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். கோரிக்கைகள் குறித்து, மாவட்டச் செயலாளர் வினோத் உரையாற்றினார்.  இதில், வியாபார சங்க செய லாளர் ரபீக், நகராட்சி செயலாளர்  சேகர், ஆட்டோ சங்கச் செயலாளர்  யோகேஷ் உள்ளிட்டோர் உரை யாற்றினர். இதில், ஏராளமான சாலையோர வியாபாரிகள் பங் கேற்றேனர். முன்னதாக நகராட்சி ஆணையர், காவல்துறை கண் காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். முடிவில், சாலையோர வியா பாரிகள் மாவட்ட பொருளாளர் கோகிலா நன்றி கூறினார்.

;