districts

img

கூலி உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காண்க சேகோசர்வ் சிஐடியு சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூன் 20- சேலம் சேகோசர்வ் நிறுவனத்தில் சுமைப்பணி தொழிலாளர்களின் கூலி  உயர்வு பிரச்சனையில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வலியுறுத்தி சேகோ சர்வ் ஆலை நுழைவாயில் முன்பு, சேலம் ஜில்லா சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கிளை நிர்வாகி அன்பு தலைமை தாங்கி னார்.  இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆர்.வெங்கட பதி, செயலாளர் ஏ.கோவிந்தன், பி.பால கிருஷ்ணன்  உள்ளிட்ட சங்க கிளை நிர்வாகி கள், சேகோசர்வ் சுமை தூக்கும் தொழிலா ளர்கள் திரளானோர் பங்கேற்றனர்.