districts

img

வாகன வழிப்பறி; சுங்க கட்டணத்தை குறைத்திடு

சேலம், மார்ச் 31- வாகன ஓட்டிகளிடம் வழிப்பறி  செய்யும், சுங்க கட்டணத்தை குறைத் திட வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாவட்டத்தில் ஓமலூர் மற் றும் தலைவாசல் பகுதியில் உள்ள  சுங்கச்சாவடியை சிஐடியு அமைப் பினர் முற்றுகையிட்டு போராட்டத் தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட் டது. ஒன்றிய மோடி அரசு, மோட்டார் தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். சுங்க கட் டண உயர்வை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு சேலம் மாவட்ட சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங் கத்தின் சார்பில் ஓமலூர் சுங்கச்சா வடி முன்பு சம்மேளன செயலாளர் முருகேசன், தலைவாசல் சுங்கச்சா வடி முன்பு ஏ.முருகேசன் ஆகியோர் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி, சாலை போக்குவரத்து அகில இந்திய துணை தலைவர் மூர்த்தி, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கே. தியாகராஜன், போக்குவரத்து சங்க மாவட்ட தலை வர் செம்பான் ஆகியோர் உரை யாற்றினர். இதில், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சி.உதய குமார், போக்குவரத்து சங்க நிர் வாகி செந்தில் குமார், பெரியசாமி, விஸ்வநாதன், தங்கமலை உள்ளிட் டோர் பங்கேற்றனர். இரண்டு மையங் களில் நடைபெற்ற போராட்டத்தில் பெருந்திரளானோர் பங்கேற்றனர்.

;