திருப்பூர், பிப். 25 - திருப்பூர் மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து ரேசன் கடைகளுக்கு அனுப்பப்படும் அத்தியாவ சியப் பொருட்கள் கிழிந்த சாக்குகளில், எடை குறைவாக வழங்கப்படுகிறது. இப்பிரச்ச னையில் அதிகாரிகள் தலையிட்டு சரி செய்ய வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தி உள் ளது. இது தொடர்பாக சிஐடியு கூட்டுறவுப் பணி யாளர் சங்க மாவட்டத் தலைவர் பி.கௌத மன், கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சனிக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதா வது: திருப்பூர் மாவட்டம் முழுவதும் நுகர்பொ ருள் வாணிப கழகத்தின் கிடங்குகள் மூலம் வழங்கப்படும் ரேஷன் பொருள்கள் அனைத் தும், கிழிந்த சாக்குப் பைகளில் எடை குறை வாக, நூல் மாற்றம் செய்யாமல் வழங்கப் படுகின்றன. இந்நிலை தொடர்ந்து நடை பெற்று வருகிறது. இது சம்பந்தமாக நேரடியா கவும், கடிதங்கள் மூலமும் புகார் தெரிவித் தும், ரேசன் பொருட்கள் உரிய அளவில், முறை யாக வழங்குவதில்லை. எனவே உடனடியாக அதிகாரிகள் இவ்விசயத்தில் தலையிட வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் பணியாற் றும் நகர்வுப் பணியில் உள்ள ஊழியர்கள் மூன்று வருடங்களுக்கு மேலாக பணியாற்று வோரை உடனடியாக பணி மாற்றம் செய்ய வேண்டும். மேலும் ஒரே இடத்தில் நீண்ட கால மாக செயல்பட்டதால் இவர்கள் ஊழலுக்கு உறுதுணையாக செயல்படும் நிலை உள் ளது. ஆகவே கால தாமதம் செய்யாமல் இவர் களைப் பணி மாற்றம் செய்ய வேண்டும். மாவட்டம் முழுவதும் பல நியாய விலைக் கடைகளில் டேமேஜ் அரிசி மற்றும் எலி கடித்த ஆயில்களும் உள்ளன. உடனடியாக அவற்றை மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நியாய விலைக் கடைகளுக்கு வழங்கக்கூடிய மண் ணெண்ணெய் 100 லிட்டர் குறைவாக ஒதுக் கீடு செய்து, அதில் 5 லிட்டர் வரை குறை வாக வழங்கப்படுகிறது. கோதுமை மாத இறு தியில் வழங்காமல் முதல் வாரத்திலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட இந்த கோரிக்கைகள் தொடர் பாக காலதாமதம் செய்யாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், தவறும்பட்சத்தில் மார்ச் இரண்டாம் வாரத்தில் திருப்பூர் மாவட்ட கூட்டுறவுப் பணியாளர் (சிஐடியு) சங்கத்தினர் போராட்ட நடவடிக்கையில் இறங்க நேரிடும் என்றும் மாவட்டத் தலை வர் பி.கௌதமன் கூறியிருக்கிறார்.