districts

பெண் தொழிலாளர்களிடம் பாலியல் அத்துமீறல் காங்கேயம் முன்னாள் நகராட்சி ஆணையாளர் மீது வழக்குபதிவு

தாராபுரம், மார்ச் 8- காங்கேயம் நகராட்சி முன்னாள் ஆணை யாளர் பெண் தொழிலாளர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நக ராட்சி ஆணையராக இருந்தவர் முத்துக் குமார்.  இவர் ஒப்பந்த அடிப்படையில் பணி யாற்றி வந்த கொசுப்புழு ஒழிப்பு பெண் பணி யாளர்களிடம் அதிகாரத்தைப் பயன்படுத்தி  பாலியல் சீண்டல் நடவடிக்கைகளில் ஈடுபட் டிருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்  தொழிலாளர்கள் சிஐடியு நிர்வாகிகளுடன் சென்று மாநில அமைச்சர், மாவட்ட ஆட்சி யர் உள்ளிட்டோரிடம் புகார் அளித்தனர். மேலும், நகராட்சி ஆணையரின் மீது நடவ டிக்கை எடுக்கக் கோரி தொடர் போராட்டங் ்களையும் மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து அவர் இடமாற்றம் செய்யப்பட் டார். மேலும், விசாகா கமிட்டியின் மூலம்  இப்புகார் குறித்து விசாரிக்க மாவட்ட ஆட்சி யர் உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் அம்பிகா தலை மையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.  இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆணை யாளர் முத்துகுமார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு செய் தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், புகாருக்குள்ளான ஆணையாளர் முத்துக் குமார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தர விட்டார். இதையடுத்து காங்கயம் காவல் துறையினர் முத்துக்குமார் மீது பாலியல்  அத்துமீறல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும், இந்த  புகார் தொடர்பாக விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.  இதேபோல், ஆணையாளருக்கு உடந் தையாக இருந்த காங்கயம் நகராட்சி அலுவ லகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் கார்த்திகேயன் என்பவர் மீதும் வழக் குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆணையா ளர் முத்துக்குமார் தற்போது திருவாருர் மாவட்டம், திருத்துறைபூண்டி நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.