கு.ராமகிருட்டிணன் விமர்சனம்
கோவை, ஆக.3- சீமானின் பேச்சுகளால் ஏமாந்து கொண்டிருக்கும் தமிழக இளைஞர் களே, அடுத்து உங்கள் மீது தனது பாய்ச்சலை தொடங்குவார், தம்பி கள் எச்சரிக்கையாக இருக்க வேண் டும் என தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரை நாள், ஒரு மணி நேரம் ஆட் சியை கொடுங்கள் என்று மக்களி டையே கெஞ்சிக்கொண்டிருந்த சீமான், தனக்கு வாக்களிக்காத எல்லோ ருமே சாத்தானின் பிள்ளைகள் என உளரத் தொடங்கி இருக்கிறார். கிறிஸ் தவர்களும், முஸ்லிம்களும் சாத்தா னின் பிள்ளைகள் என சீமான் விரக் தியின் உச்சியில் பேசியிருக்கிறார். அதற்கு காரணமாக தனக்கு வாக்க ளிக்காமல், திராவிட கழகங்களான திமுகவிற்கும், அதிமுகவிற்கும் வாக் களித்தவர் கிறிஸ்தவர்கள், முஸ்லிம் கள். இந்த 18 சதவிகித வாக்கால் தான் திமுக ஆட்சிக்கு வந்து கொண்டிருக் கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததால் தான் விலைவாசி உயர்ந்துள்ளது; வேலை இல்லா திண்டாட்டம் உள் ளது என்ற ஒரு புதுமையான குற்றச் சாட்டுகளை அடுக்கிக் கொண்டே செல் கிறார். சீமான் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சீமா னின் பேச்சுக்கள், உடல் அசைவு களை பார்த்து ஏமாந்து கொண்டிருக் கிற தமிழக இளைஞர்களே, அடுத்து உங்கள் மீதும் பாய்ச்சலை தொடங்கு வார். எச்சரிக்கையாக இருங்கள், என் றார். மேலும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் இது வரை நடைபயணத்தில் தான் ஆட் சிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என ஒரு தப்பு கணக்கு போட்டு நடக்கத் துவங்கியுள்ளார்.
ஆனால் நடந்த தலைவர்கள் எல்லாம் தொடர்ந்து இடைவிடாமல் இரவு பகல் பாராமல் நடந்தார்கள். அவர்களெல்லாம் கிரா மத்திற்கு சென்றாலும், கிராமத்தில் இருக்கக்கூடிய தொண்டர்களின் இல் லங்களில் தங்கி தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்கள். ஆனால், அண் ணாமலை நீரழிவு நோயாளிகள் நடப் பது போல, ஒரு நாளைக்கு இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை தான் நடக்கி றார். இவர் தினமும் இரண்டு கிலோ மீட்டர் நடந்து 10 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை, நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து தான் முடிப்பார். “என் மண் என் மக்கள்” என்று இவர் நடக்கின்ற மண்ணைத்தான், ஒன்றிய அரசு கார்ப் பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்த் துக் கொண்டிருக்கிறது. இவருடைய நடைபயணத்தை யாரும் ரசிக்க வில்லை; விரைவில் அவர் வீடு திரும் புவார். ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மீது வைக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச் சாட்டு, உண்மையாக இருக்குமா னால் மாநில அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 4 பேர் திருச்சி சிறப்பு முகாமில் உள்ளனர். அது ஒரு தனிமைபடுத்தப்பட்ட சிறை. வேலூர் சிறையை விட அது கொடு மையான ஒன்று. எனவே அந்த 4 பேரையும் அவர்கள் விரும்புகின்ற நாட்டிற்கோ அல்லது பிரான்ஸ் நாட்டு அரசு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அங்கு அவர்களை அனுப்ப வேண் டும். இவ்வாறு கு.ராமகிருட்டிணன் தெரிவித்தார்.