தாராபுரம், நவ. 2 - தாராபுரம் நகராட்சி 19 ஆவது வார்டில் 1.45 லட்சம் மதிப் பில் போர்வெல் அமைக்கப்பட்டு தண்ணீர் வினியோகத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார். தாராபுரம் நகராட்சி 19 ஆவது வார்டு ராஜவாய்க்காலில் இரு கரைகளில் ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதியில் ஏராள மானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் போர் வாட்டர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்க ளின் கோரிக்கை ஏற்று ரூ 1.45 லட்சம் மதிப்பில் புதிதாக போர் வெல் போடப்பட்டு 2 ஆயிரம் லிட்டர் சின்டெக்ஸ் டேங்க் அமைக்கப்பட்டது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சின்டெக்ஸ் டேங்கை திறந்து வைத்து இரு பகுதியிலும் குடிநீர் பைப்பை திறந்து பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தாராபுரம் நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன், 19 ஆவது வார்டு கவுன்சிலர் புனிதா, திமுக வார்டு செயலாளர் ஜோமணிமாறன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.