districts

img

கோவையில் பி.எம்.ஜே ஜூவலஸ்-ன் முதல் ஷோரும்

கோவை, ஜூலை 5-  கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பி.எம்.ஜே ஜூவல்ஸ்-ன் முதல் விற்பனையகம் துவங்கப்பட உள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த ஐம்பது ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பி.எம்.ஜே ஜூவல்ஸ் ஏற்கனவே ஆந்திரா, தெலுங்கானாவில் இந்த நிறுவனத்தின் கிளைகள் உள்ளன. இந்தியா முழுக்க 24 ஷோரூம்கள் இந்த நிறுவனத்திற்கு உள்ளன. இந்த நிலையில், பி.எம்.ஜே தனது கிளைகளை தமிழகம் மற்றும் கர்நாடகத்திலும் துவக்கி வருகிறது. அதன்படி, கோவை ஆர்.எஸ்.புரத்தில் இந்த நிறுவனத்தின் புதிய கிளை துவங்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து பி.எம்.ஜே நிறுவனத்தின் மண்டல மேலாளர் ஹைதர் அலி மற்றும் தமிழக தொழில் தலைவர் செந்தில்குமார் நடராஜன் ஆகியோர் கூறுகையில், “கோவை அனைத்து தொழில்களுக்கும் வரவேற்பு கொடுக்கும் ஒரு நகரமாக இருப்பதால் கோவையில் எங்கள் கிளையை துவக்கியுள்ளோம். நகைகளையும் நமது கலாச்சாரத்தையும் பிரிக்க முடியாது. எப்போதும் நகைகளுக்கான தேவை மக்களுக்கு இருக்கும். எங்கள் நிறுவனத்தில் 5 லட்சம் டிசைன்கள் உள்ளன. கோவையில் மட்டும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட டிசைன்கள் உள்ளன. எங்கள் ஒரு கிளையில் இருந்து வீடியோ ஸ்டோர் மூலமாக அனைத்து கிளைகளில் உள்ள நகைகளையும் பார்த்து அதனை வாங்கலாம். கோவை மக்களின் விருப்பத்திற்கேற்ப தற்போது நகைகளை தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளோம், என்றார்.