அவிநாசி, அக். 13- அவிநாசியில் களஞ்சியம் விவசாயிகள் சங்கம் சார்பில் குறைந்த கட்டணத்தில் ரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது. அவிநாசியில் களஞ்சியம் விவசாய சங்கம், சஞ்சீ வினி மெடிக்கல், தைராய்டு கேர் மற்றும் ஜெமினி லேப் இணைந்து தைராய்டு, கொழுப்பு, கல்லீரல், சிறு நீரகம், ரத்தசோகை உள்ளிட்ட பரிசோதனைகள் குறைந்த கட்டணத்தில் செய்யப்பட்டன. சஞ்சீவினி மெடிக்கல் சென்டரில் நடைபெற்ற இம்முகாமில் களஞ்சியம் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள், பரிசோதகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.