districts

img

சோதனைக்கு உள்ளான பாஜகவின் சாதனை கூட்டம்

நாமக்கல், ஜுன் 3- ஆளே இல்லாத ஊரில் யாருக்கு டீ  ஆத்துகிறாய் என்பதாய் பாஜகவின் சாதனை விளக்கக் கூட்டம் சோதனைக்கு உள்ளானது. காலி மைதானத்தை பார்த்து எச்.ராஜா முழங் கியது நகைப்பை ஏற்படுத்தியது. திருச்செங்கோட்டில், பாஜக சார்பில் 9 ஆம் ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்காக அங்கிருந்த சாலையை முழுவதுமாக ஆக்கிரமிக் கப்பட்டு வாகன ஓட்டிகளை  பெரும் அவதிக்குள்ளாக்கினர். இது ஒரு புறமிருக்க, சிறப்பு அழைப்பாளராக எச்.ராஜா பங்கேற்று உரையாற்ற துவங்கினார்.  அவர் பேசத் துவங்கியவுடன், இருந்த கொஞ்சம் நஞ்சமாக இருந்த கூட்டமும் எழுந்து சென்றது. காசு கொடுத்து கூட்டி வந்த கூட்டம்கூட எச்.ராஜா பேச்சை கேட்காமல் கலைந்து சென்றதால் நிர்வாகிகள் கலக்கமடைந்தனர். ஒன்றிய அரசின் சாதனை விளக்க கூட்டம், பெரும் சோதனை கூட்டமாக மாறியதாக அங்கிருந்த அரசியல் நோக்கர்கள் எள்ளி நகையாடினர்.