districts

img

மனிதனாகணும் மனிதனாகணும்

சிவப்பு என்கிற மலை யாள திரைப்படத் திற்காக கவிஞர் முருகன் காட்டாக்கடா  எழுதி அவரே பாடியது ‘மனுஷ்யராகணும்’ எனத் தொடங்கும் பாடல் கேர ளத்தில் பிரபலமாகிவிட்டது. இந்த பாடல் பிளவர்ஸ் என்கிற மலையாள தொலைக்காட்சியின் புத்தாண்டு நிகழ்ச்சியால் சமூக ஊடகங்களில் வைரலானது. தேவிகா என்கிற 6 வயதேயான சிறுமி உணர்ச்சிகரமாக இந்த பாடலை முருகன் காட்டாக்கடாவுடன் இணைந்து பாடினார். பிளவர்ஸ் 1 கோடி என்கிற அந்த ஒரு மணி 42 நிமிட  நிகழ்ச்சி யூடியுபில் வைரலாகி வருகிறது. நிகழ்ச்சியில்  முருகன் காட்டாக்கடாவின் மனைவி லேகா, தேவிகா,  நண்பரும் சாகித்ய அகாடமி நிகழ்ச்சி ஒருங்கிணைப் பாளருமான சுனில் குமார் ஆகியோர் பங்கேற்றனர். யூடியுபில் ஜன.2 இல் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த காட்சியை 4 நாட்களில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மட்டும் பார்த்துள்ளனர்.

முருகன் காட்டாக்கடயின் மனைவி லேகா, பிஞ்சுப் படகி தேவிகா, நண்பரும் சாகித்ய அகாடமி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான சுனில் குமார்

இதோ அந்த பாடல் வரிகள்…..
  
மனிதனாகணும் மனிதனாகணும்
உயர்ச்சி தாழ்ச்சி விஞ்சிய மனித நேயமே
உனக்கு நாங்கள் சூட்டும் பெயர்
அதுதான் மார்க்சியம்

கொன்று கொன்று எங்களை
கொன்று தள்ளலாம்
ஆனாலும் தோற்பதில்லை
அதுதான் மார்க்சியம்

தோற்பதில்லை தோற்பதில்லை
தோற்றதென்றால் இல்லை மார்க்சியம்

மாற்றம் என்னும் மாற்றமே
நேர்வழிக்கு மாறணும்
மாறி மாறி மனிதர் நாம்
சரிசமமாய் ஆகணும்

நேர்வழிக்கு நாம் கொடுத்த
பேரதுதான் மார்க்சியம்
அந்த நேர்வழிக்கு நாம் கொடுத்த
பேரதுதான் மார்க்சியம்

இயன்ற பணி செய்யணும்
தேவைக்கேற்ப எடுக்கணும்
மீதமுள்ளதோ பகுத்து பங்கு வைக்கணும்

காதலே… கலகமே… காதலே… கலகமே…
இயற்கை நேசமே
உனக்கு நாங்கள் சூட்டும் பெயர் மார்க்சியம்

தோற்பதில்லை தோற்பதில்லை
தோற்றதென்றால் இல்லை மார்க்சியம்

மனிதனாகணும் மனிதனாகணும்

புல்லும் புழுவும் உயிர்கள் அனைத்தும்
சமம் என்ற உண்மையின் பெயர்தான் மார்க்சியம்

மனிதனாகணும் மனிதனாகணும்

கிழக்கிலிருந்துமல்ல சூரியன்
தெற்கிலிருந்துமல்ல சூரியன்
உள்ளத்திலிருந்து பொங்கி எழுந்து வந்து நிற்கணும்
வெளிச்சமே… வெளிச்சமே…
உனக்கு நாங்கள் சூட்டும் பெயரதுதான் மார்க்சியம்
மார்க்சியம்…. மார்க்சியம்….

சிவந்த இரவில் பிறந்த சூரியப் பிரகாசமே
முடிவே இல்லாத நிரந்தர ஒளிக்கீற்றே
மனித நேயமே… மனித நேயமே…
உனக்கு நாங்கள் சூட்டும் பெயர்தான் மார்க்சியம்.

தமிழில் சி.முருகேசன்