நாமக்கல், மார்ச் 31- குமாரபாளையத்தில் நடைபெற்ற உடல்நலம் குறித்த விழிப்புணர்வு ஓவியப்போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சன்ரைஸ் அகா டமி, லிட்டில் ஹான்ட்ஸ் பொதுநல அமைப்பு சார்பில், ஓவி யம், கைவினை பொருட்கள் பயிற்சி, யோகா, உடல்நலம் காக்கும் விழிப்புணர்வு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப் பட்டு வருகிறது. இந்நிலையில், 3 வயது முதல் பல்வேறு வயது பிரிவின் கீழ் ஓவியப்போட்டிகள் நடைபெற்றது. இதனி டையே, கராத்தே பயிற்சியாளர் பாஸ்கரின் ஷேடோகாய் கராத்தே டூ இன்டர்நேஷனல் ரகுவா சிட்டோரியா அமைப் பின் சார்பில், பயிற்சி மாணவர்கள் கராத்தே சாதனை கள் செய்து காட்டினர். 350க்கும் மேற்பட்ட மாணவ, மாண வியர்கள் ஆர்வத்துடன் போட்டியில் பங்கேற்றனர். முடிவில், சிறந்த ஓவியங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.