districts

img

பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மாற்று பாலினத்தவர்கள் விழிப்புணர்வு

கோவை, ஏப்.13-  பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும், பிளாஸ் டிக்கின் பாதிப்பு குறித்தும் பொதுமக்க ளுக்கு சாகி வெல்பர் பவுண்டேசன் எனும் அமைப்பை துவங்கி, மாற்று பாலினத்த வர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை அந்த  அமைப்பின் தலைவர் சோனா துவக்கி வைத் தார். இதன்பின் அவர் பேசுகையில், பிளாஸ் டிக் பயன்பாட்டை பொதுமக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். நிலத்தடி நீர்மட்டம், பிளாஸ்டிக் உபயோகித்தால் பாதிக்கப் படும் என தெரிவித்தார். மேலும், சுற்றுச் சூழல், சமுதாய விழிப்புணர்வு மற்றும் பொது கடமைகள் பற்றி மாதந்தோறும்  பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்படும் என அமைப்பின் தலைவர் சோனா தெரிவித் துள்ளார்.  முன்னதாக, இந்நிகழ்வில் அவ்வமை யின் துணைத்தலைவர் யாமினி, செயலா ளர் சரிகா மற்றும் சாகி அமைப்பை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட மாற்று பாலினத்தோர்  பங்கேற்றனர். சூலூர் பகுதியில் உள்ள கடை கள் மற்றும் பொது மக்களுக்கு துண்டு அறிக்கை கொடுத்து பிளாஸ்டிக் விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர்.