districts

img

குழந்தைகளை பாதிக்கும் சர்க்கரை நோய்

கோவை, நவ.26- குழந்தைகளை பாதிக்கும் டைப் 1  சர்க்கரை நோய் குறித்து மக்கள் மத்தி யில் விழிப்புணர்வு ஏற்படுத்தும்  வகை யில் கோவையில் விழிப்புணர்வு கிட்டத் தான் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்தியாவில் டைப் 1 டயாபட்டிக் குழந்தைகளுக்கான நீரிழிவு நோய்  பாதிப்பானது நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது. தமிழ்நாட்டில் 20 ஆயிரம் குழந்தைகளுக்கும், இந்திய அளவில் 5 லட்சம் குழந்தைகளுக்கும் இந்த பாதிப்பு இருக்கின்றன. 7 மாத குழந்தைகள் முதல் இந்த பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்ற நிலையில், பள்ளி செல்லும் குழந்தைகளில் 1 சத வீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக் கப்பட்டிருக்கின்றனர். போதுமான விழிப்புணர்வின்றி மருந்துகளை உட் கொள்ளாததால், சிறுவயதிலேயே சிறு நீரகம் செயலிழப்பு உள்ளிட்ட உடல்நல பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.  இந்நிலையில், இதுகுறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில் முதன் முறையாக குழந் தைகளை முன்னிலைப்படுத்தி நடை பெற்ற “கிட்ஸ் வாக்கத்தான் - கிட்டத் தான் 2023” விழிப்புணர்வு நிகழ்ச்சி தன்னார்வலர்கள் முன்னெடுப்பில் நடத்தப்பட்டன . “கிட்ஸ் விழிப்புணர்வு வாக்கதான் - கிட்டத்தான் 2023” என்ற  பெயரில் நடைபெற்ற இந்த விழிப்பு ணர்வு நிகழ்வில், டைப் 1 டயாபட்டிக் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 150  குழந்தைகள் உட்பட ஆயிரத்தத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விழிப் புணர்வை ஏற்படுத்தினர். கோவை பந்தைய சாலை தாமஸ் பார்க்கில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி துவக்கி வைத்தார். பந்தைய சாலை மீடியா டவரில் ஆரம்பித்த இந்த விழிப்புணர்வு, பந்தய சாலை முழுவதும் சுற்றி மீண்டும்  அதே இடத்திற்கு வந்தடைந்தது. குழந்தைகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீல நிற தொப்பி, உடை மற்றும் பதாகைகளை ஏந்தி நடந்து  சென்று  சிறார் நீரிழிவு நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.