districts

img

ஆட்டோ ஸ்டேன்டை அகற்ற முயற்சி நகர்மன்ற‌ தலைவரிடம் சிஐடியு மனு

தருமபுரி, ஜூலை 12- தருமபுரி ராஜகோபால் பூங்கா அருகில் உள்ள ஆட்டோ  ஸ்டேண்டை அகற்றும் முயற்சியை கைவிடக் கோரி சிஐடியு  தருமபுரி மாவட்ட கே.எம்.ஹரிபட் ஆட்டோ ஓட்டுனர்கள் மற் றும் தொழிலாளர்‌ சங்கத்தின் சார்பில் தருமபுரி நகர்மன்ற  தலைவர் லட்சுமி நாட்டார் மாதுவிடம் மனு அளிக்கப்பட் டது. இதில், தருமபுரி ராஜகோபால் பூங்கா அருகே கடந்த 10 வருடங்களாக மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு  ஆட்டோ ஸ்டேன்ட் அமைத்து இயங்கி வருகிறது. 10 ஆண்டுக ளுக்கு முன் ஆட்டோ தொழிலாளர்களின் பல கட்ட போராட் டங்களுக்கு பிறகு மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் மற்றும் நகராட்சி நிர்வாகத்துடன் சிஐடியு தொழிற் சங்க நிர்வாகிகள் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி ராஜகோ பால் பூங்கா அருகில் ஆட்டோ ஸ்டேன்ட் அமைத்துக்கொள்ள  மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்து. ஆனால், தற்போது ராஜகோபால் பூங்காவின் ஓரம் பராம ரிப்பு பணிசெய்கிறோம் என்று கூறி, நகராட்சி நிர்வாகம் சுற்றுச் சுவரை தாண்டி 3 அடி இடைவெளியில் மேலும் சுவர் எழுப்பு கிறோம் என கூறி ஆட்டோக்களை நிறுத்தக்கூடாது என நக ராட்சி நிர்வாகம் கூறுகிறது. இந்த சுற்றுச்சுவர் தேவையில் லாதது, நாங்கள் ஆட்டோ நிறுத்த போதிய இடமில்லாமல் சிர மப்பட்டு வருகிறோம். எனவே, தேவையில்லாத சுற்று சுவர்  அமைக்கும் முயற்சியை கைவிடவேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.