திருப்பூர், ஜூன் 3– தமிழக முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி பிறந்தநாள் விழாவின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் மரக்கன்று கள் நடும் பணிகளைத் தொடக்கி வைத்தார். வனத்துறையின் சார்பில் பசுமை தமிழ் நாடு திட்டத்தின் கீழ் இந்த பணியை ஆட்சியர் தொடங்கினார். தமிழகத்தில் வனப்ப ரப்பை 33 சதவிகிதமாக அதிகரிக்க வேண் டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டி ருக்கிறார். இதற்காக பசுமை தமிழ்நாடு திட் டத்தில் திருப்பூரில் தற்போதுள்ள 16 சதவிகித வனப்பரப்பினை 33 சதவிகிதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள் ளது. 2022 – 2023 ஆண்டில் திருப்பூர் மாவட்ட பசுமைக் குழு மூலம் 4 லட்சத்து 70 ஆயிரத்து 400 நாற்றுகள் உற்பத்தி செய்து நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தற்போது 75 ஆயிரத்து 500 நாற்றுகள் அரசு நிலங்கள், விவசாய நிலங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் நடவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் மூலம் 1 லட்சத்து 18 ஆயிரத்து 700 நாற்றுகள் வனத்துறை மூலமும், மேலும் 2 லட்சத்து 76 ஆயிரத்து 700 நாற்றுகள் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் மூலம் நடவு செய்ய நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு வருவதாகவும் ஆட்சியர் அலுவ லக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் முதல் கட்டமாக கருணாநிதி யின் 99ஆவது பிறந்த தினமான வெள்ளிக்கிழமை மாவட்டம் முழுவதும் 1000 நாற்றுகள் நடப்படுவதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.