districts

img

பெருவழியில் கேட்பாரற்று கிடக்கும் தொல்லியல் சின்னங்கள்

உடுமலை, மார்ச் 31 - பழங்கால வாழ்க்கையை பறைசாற்றும் தொல்லியல் சின்னங்களை பாதுக்காக்க தொல்லியல்துறை உடுமலை பகுதியில் தொடர் ஆய்வுகளை நடத்த வேண்டும் என  கோரிக்கை எழுந்துள்ளது. உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் கடந்த 2014 மற்றும் 2018 ஆம் வரு டங்களில் உடுமலை தாலுகா, குடிமங்கலம்  ஒன்றியம் சோமவாரப்பட்டி பகுதியை தொல் லியல் துறையினர் அகழ்வாய்வு செய்ய வேண்டி மத்திய, மாநில தொல்லியல் துறைக ளுக்கு விண்ணப்பங்கள் அனுப்பினர். இந்நிலையில், கடந்த ஞாயிறன்று சோம வாரப்பட்டி முக்கண்டியம்மன் கோயில் மற் றும் மச வீரராயப்பெருமாள் கோவில் பகுதிக ளில் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தி னர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கருப்பு  சிவப்பு பானை ஓடுகள், எரிகற்கள், இரண்டு  கற்திட்டைகள் என ஏராளமான  தொல்லியல் சின்னங்களைப் பார்த்தனர். இது குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, இந்தக் குழியில் இருக்கும் நெடுங்கற்கள் சுமார் 10,  15 அடி உயரம் இருப்பதாகவும், இதனை மேலும் தோண்டி எடுக்க முடியாததால் மண்  மூடி விட்டதாகவும் கூறினர். பின்னர் அரசங் காடு பகுதிக்கு சென்றபோது ஏராளமான கருப்பு, சிவப்பு ஓடுகளும், பெரிய தாழிகளும்  உடைந்து கிடந்தன.

இது குறித்து அப்பகுதி மக்களிடம் கூறும் போது, இந்த மாதிரி நிறைய பானைகள் இந்த  மண்ணுக்குள் உள்ளதாகவும், மழை காலங்க ளில் தோண்டி எடுக்கலாம் என்றனர். இக்குழி களை வட்டார வழக்கில் பாண்டியர் குழி என்று  அழைக்கின்றனர். இது உண்மையில் மாண் டவர் (இறந்து போனவர், அகவை முதிர்ந்து நடக்க முடியாமல் கவனிப்பாரற்று இறந்து போகக்கூடியவர் அமர்ந்து உயிர் விடும்) குழி  என்பதையே வட்டார வழக்கில் மாண்டவர் குழி என்று சொல்கின்றனர்.  இவ்விடத்தில்தான் கடந்த நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு கோவை பூ.சா.கோ.  அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவ ராக இருந்த முனைவர் ரவி ஏராளமான கருப்பு, சிவப்பு ஓடுகள், பச்சை மணிகள், இரும்புத்தாதுப் பொருட்கள் என நிறைய பொருட்களை எடுத்தார். மேலும், கொங்கு நாட்டின் ஏராளமான கல்வெட்டுகளை ஆய்வு செய்து ஆவணப்படுத்திய முனைவர்  பூங்குன்றன் அகழ்வாய்வு செய்ய வேண்டிய  முக்கியமான பகுதிகளுள் இதுவும் ஒன்று என  தெரிவித்தார். இது குறித்து உடுமலை வரலாற்று ஆய்வு  நடுவத்தினர் தெரிவிக்கையில், சோமவாரப் பட்டி அமரபுயங்கன் கி.பி. 960 முதல் 983 வரை  அரசாட்சி செய்ததும், அந்த அரசனின் பெயரால் அமரபுயங்கீஸ்வரன் என்ற சிவ னிய வழிபாட்டுத்தலம் இருப்பதும், உடு மலை வரலாறு என்ற நூலில் பெதப்பம்பட்டி நத்தமேடு பகுதிகளை குறித்து பதிவு செய் துள்ளது. இந்த பகுதிகளை தொடர்ந்து ஆய்வு செய்தபோது இங்கு தொழிற்சாலை இருந்ததை  எரிகற்கள் நமக்கு  உறுதிப்படுத் துகின்றன. மேலும், இந்த  கொங்குப் பெருவழியில்  குரும்பபாளையம் நெடுங்கல், கொங்கல்  நகரம் நெடுங்கல், உரம்பூர் - நாட்டுக்கல்பா ளையம் நெடுங்கல் இருப்பதையும்,  இந்த  வழி பெருவழி என்றும், பெரிய அளவில்  வணிகம் நடந்திருப்பதையும்  உறுதிப்படுத்து கிறது.  தொல்லியல் சார்ந்த பழங்கால கற்திட் டைகள், தொல்லியல் சின்னங்கள் அனைத் தும் வரலாற்று ஆய்வாளர்கள் கண் முன்னே  பாழடைந்து வருவது மிகுந்த வேதனை யைத் தருவதாக தெரிவித்தனர். எனவே இப்ப குதியில் ஆய்வுகள் மேற்கொள்ள அரசு உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி னர். (ந.நி)

;