districts

தருமபுரி: இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தருமபுரி, மே 4- இளைஞர் விருதுபெற தகுதி வாய்ந்த இளைஞர்களிடமி ருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தருமபுரி  மாவட்ட ஆட்சியர்‌ ச.திவ்யதர் சினி தெரிவித்துள்ளார். சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்க ளது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ் வொரு ஆண்டும் சுதந்திர தினத் தன்று 15 முதல் 35 வயது வரை  உள்ள 3 ஆண்கள் மற்றும் 3  பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த முதலமைச் சர் மாநில இளைஞர் விருது ஒரு  லட்சம் ரூபாய் ரொக்கம், பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக் கத்தை உள்ளடக்கியதாகும். அதன்படி, 2022 ஆம் ஆண்டிற் கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று நடைபெறும் சுதந்திர தினவிழா வில் தமிழ்நாடு முதலமைச் சர் அவர்களால் வழங்கப்பட வுள்ளது. இவ்விருது தொடர் பான கீழ்காணும் தகுதிகள் வரை யறுக்கப்பட்டுள்ளன. 15 வயது முதல் 35 வயது  வரையுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் விண்ணப் பிக்கலாம். ஏப்.1 ஆம் தேதி யன்று 15 வயது நிரம்பியவ ராக இருத்தல் வேண்டும் அல் லது மார்ச் 31 ஆம் தேதியன்று 35  வயதிற்குள்ளாக இருத்தல் வேண்டும். இவ்விருதிற்கு தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn. gov.in என்ற இணையதளம் மூல மாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மே 10 ஆம் தேதி மாலை 4.00 மணியே கடைசியாகும். எனவே, தரும புரி மாவட்டத்திலுள்ள தகுதி வாய்ந்த இளைஞர்கள் இவ் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சி யர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள் ளார்.